துரியன் பழம் சாப்பிடுவதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? அதுவும் பெண்கள்!

துரியன் பழம் சாப்பிடுவதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? அதுவும் பெண்கள்!

Last Updated on: 5th January 2024, 09:22 pm

பல திருமணமான தம்பதிகள் எதிர் கொள்ளும் பொதுவான பிரச்சனைகளில் கருவுறாமல் போவது முக்கிய பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. இதற்காக பலர் பணம் செலவழித்து மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். ஆனால் பெண்கள் கருவுறாமல் போகும் பிரச்சினையைத் தீர்க்க ஒரு பழம் உதவும் என்றால் நீங்கள் நம்புவீர்களா? அதுதான் பார்ப்பதற்கு பலாப்பழம் போலவே இருக்கும் துரியன் பழம். இது பெண்கள் கருவுறாமைக்கு சிறந்த தீர்வாக இருக்கும் என சொல்லப்படுகிறது. 

உலகெங்கிலும் பல இடங்களில் பொதுவெளியில் சாப்பிடுவதற்கு தடை செய்யப்பட்ட பழங்களில் துரியன் பழம் முதலிடத்தில் உள்ளது. இதன் சுவை நன்றாக இருந்தாலும் அதிலிருந்து வீசும் மோசமான மணம் காரணமாக, இது பல பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இதை விமானங்களில் எடுத்துச் செல்லக்கூடாது. பலாப்பழம் போலவே இந்த பழத்தின் உட்புறம் மென்மையாக இருக்கும். இவை குறிப்பாக இந்தோனேஷியா, மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற பகுதிகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது. 

ஊட்டச்சத்துக்களின் அடிப்படையில் துரியன் பழம் நம் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக துரியன் பழத்தில் பெண்களுக்குத் தேவையான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உள்ளது. இது பெண்கள் இயற்கையாக கருத்தரிப்பதற்கு உதவும் என்கின்றனர். பெண்கள் கருவுறாமல் போவதற்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனில் உள்ள குறைபாடு காரணமாக இருப்பதால், இந்த பழம் பெண்களுக்கு வரப்பிரசாதம் எனலாம். மேலும் இந்த பழம் பாலுணர்வு தூண்டியாக செயல்படுகிறது. எனவே ஆண்களுக்கு பாலியல் உந்துதலை அதிகரித்து விந்தணுவை மேம்படுத்தி ஆண்களின் மலட்டுத்தன்மையையும் போக்கும். பெண்கள் கர்ப்ப காலத்தில் அவர்களின் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க துரியன் பழம் உதவும். இதில் உடலுக்குத் தேவையான கொழுப்புகள் உள்ளன. இதை சரியான அளவில் உட்கொள்ளும்போது உடலுக்கு நன்மைகளைக் கொடுக்கிறது. 

துரியன் பழம் சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் மேம்பட்டு, புற்றுநோயின் அபாயம் குறைகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எலும்புகளின் ஆரோக்கியத்தையும் சிறப்பாக மாற்றும் தன்மை உள்ளது. தமிழகத்தில் குன்னூர் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் துரியன் பழம் அதிகம் கிடைக்கும். துரியன் பழம் ஆண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் என்பதால் இந்த பழங்கள் சீசன் இல்லாத காலங்களில் 3000 ரூபாய்க்கு கூட விற்கப்படும். சாதாரண நாட்களில் ஒரு பழம் ரூபாய் 1000 முதல் 1500 வரை விற்கப்படும் என சொல்லப்படுகிறது. எனவே குழந்தை பேறு உண்டாக விரும்பும் பெண்கள் நிச்சயம் இந்த பழத்தை வாங்கி சாப்பிடுங்கள். 

Leave a Comment