தற்போது கத்தார் பயண கொள்கையில் பொது சுகாதார அமைச்சகம் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.
அதன்படி, நாளை (செப்டம்பர் 4) முதல், வெளி நாடுகளில் இருந்து கத்தாருக்கு வரும் பயணிகள், ஹோட்டலில் தனிமைப்படுத்தலுக்குச் செல்லத் தேவையில்லை. ஆனால் பார்வையாளர்களுக்கு பயணம் செய்த 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட நெகடீவ் பி.சி.ஆர். சோதனை சான்றிதழ் கட்டாயமாக இருக்க வேண்டும். கோவிட் -19 சோதனை செய்தவர்கள் நாட்டில் பின்பற்றப்படும் நடைமுறைகளின்படி தனிமைப்படுத்தப்பட வேண்டும் ஆனால் இந்த மாற்றம் செப்டம்பர் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது. கோவிட் நோயின் நிலைக்கு ஏற்ப நாடுகளை வகைப்படுத்துவதை நிறுத்தியுள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து இதுபோன்ற பல முக்கிய தகவலுக்கு எங்கள் WhatsApp குரூப்பில் (https://bit.ly/3SWGrZk) இணைத்து கொள்ளுங்கள்.