அரசு பேருந்துகளில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தால் 10% சலுகை முழு விபரம்..

அரசுப் பேருந்துகளில் தொலைதூர நகரங்களுக்குச் சென்று வர ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இது அமலுக்கும் வந்துள்ளது.விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் அதிநவீன பேருந்துகள், குளிர்சாதனப் பேருந்து, குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்துகள், கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்துகள் என 1,082 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

எனவே தமிழக அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் இணையதளத்தின் மூலம் ஒரு மாதத்திற்கு முன்பே பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.மக்கள் அரசு தொலைதூரங்களுக்கு பயணப்பட விரும்பினால் அதை ஊக்குவிப்பதற்கும், விழா நாட்களில் பயணிப்பதற்கு உதவுமாறு இந்த இணையதளத்தில் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இணையத்தளம் மூலமாக இருவழி பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று என்று போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

தற்போது இத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படும் குறிப்பிட்ட நகரத்திலிருந்து புறப்பட்டு அதே இடத்திற்கு திரும்பும் பயணிகளுக்கு மட்டுமே இந்த கட்டணச் சலுகை பொருந்தும்.குறிப்பிட்ட நகரத்திற்கு செல்வதற்கு மட்டும் பதிவு செய்தால் கட்டணச் சலுகை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இதுபோன்ற பல முக்கிய தகவலுக்கு எங்கள் WhatsApp குரூப்பில் (https://bit.ly/3SWGrZk) இணைத்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times