16.1 C
Munich
Saturday, July 27, 2024

ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ரூ.2,000 கோடி ஆயுதம் அனுப்பும் அமெரிக்கா!!

Must read

Last Updated on: 2nd September 2023, 07:55 pm

வாஷிங்டன்: ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து வருகிற நிலையில், உக்ரைனுக்கு போரில் உதவ 250 மில்லியன் டாலர் (ரூ.2,000 கோடி) மதிப்பில் கூடுதலாக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் வழங்குவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

நிலக்கரி சுரங்க பயன்பாட்டுக்கான உபகரணங்கள், இயந்திரத் துப்பாக்கிகள், ஏவுகணைகள், ஆம்புலன்ஸ், போர் மருத்துவ உபகரணங்கள், உதிரி பாகங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனின் அடிப்படை உள்கட்டமைப்பை ரஷ்யா தரைமட்டமாக்கியது. இந்தத் தாக்குதலில் உக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரில் உக்ரைனில்1000 பள்ளிகள் அழிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

ஒன்றரை ஆண்டுகளாக ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனும் ரஷ்யா மீது பதில் தாக்குதல் நடத்துகிறது. எனினும், ரஷ்யாவை எதிர் கொள்ளும் வகையில் உக்ரைனிடம் ராணுவக் கட்டமைப்பு இல்லை. இந்நிலையில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி உதவுகின்றன.

உக்ரைனுக்கு அமெரிக்கா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இதுவரையில் 43 பில்லியன் டாலருக்கு (ரூ.3.5 லட்சம் கோடி) ஆயுதங்கள் வழங்கியுள்ளது. இந்நிலையில், உக்ரைனுக்கு 250 மில்லியன் டாலர் மதிப்பில் கூடுதல் ஆயுதங்கள் வழங்குவதாக அமெரிக்க பைடன் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏஐஎம் – 9 எம் ஏவுகணைகள், ராக்கெட் லாஞ்சர், வெடிமருந்துகள் உள்ளிட்ட ஆயுதங்கள் அமெரிக்காவின் ஆயுத இருப்பிலிருந்து வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -spot_img

More articles

17 COMMENTS

  1. Your style is very unique compared to other people I’ve read stuff from. Thanks for posting when you have the opportunity, Guess I’ll just bookmark this blog.

  2. I’m impressed, I must say. Seldom do I come across a blog that’s equally educative and interesting, and without a doubt, you have hit the nail on the head. The problem is something too few people are speaking intelligently about. I am very happy I came across this in my search for something regarding this.

  3. You’re so awesome! I don’t think I’ve read through anything like this before. So nice to discover another person with some unique thoughts on this issue. Really.. many thanks for starting this up. This site is something that is needed on the internet, someone with a bit of originality.

  4. I truly love your website.. Pleasant colors & theme. Did you create this web site yourself? Please reply back as I’m looking to create my own website and would like to learn where you got this from or what the theme is called. Many thanks!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article