Last Updated on: 2nd September 2023, 08:19 pm
ஜார்ஜியா: அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் முன்னேற்றத்தில் ‘துடிப்பான’ ‘இந்து அமெரிக்கன்’ சமூகத்தின் பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக, அக்டோபர் மாதம் ‘இந்து பாரம்பரிய மாதமாக’ அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பிரகடனத்தை வெளியிட்ட ஜார்ஜியா கவர்னர் பிரையன் கெம்ப், இந்து கலாச்சாரம் மற்றும் இந்தியாவில் வேரூன்றிய பல்வேறு ஆன்மீக மரபுகளை மையமாக வைத்து அக்டோபர் மாதம் கூட்டாக கொண்டாடப்படும் என்று கூறினார்.