Last Updated on: 15th May 2023, 10:42 am
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரை தாக்கிய சூறாவளிக்கு இருவர் பலியானதுடன், 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தரைமட்டமான வீடுகள்:
டெக்ஸாஸின் ரியோ கிராண்டே பள்ளத்தாக்கில் உள்ள லகுனா ஹைட்ஸ் பகுதியில், அதிகாலை 4 மணியளவில் பலத்த சூறாவளி தாக்கியது. இதில் பல வீடுகள் தரைமட்டமாகின. ஈடுபாடுகளுக்குள் சிக்கிய இருவர் உயிரிழந்தனர்.
அவர்கள் இருவரும் ஆண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் சூறாவளிக்கு 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பாளரின் அனுபவம்:
அப்பகுதிகளில் மேலும் மாயமான பலரை தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடியிருப்பாளர் ஒருவர் இதுகுறித்து கூறுகையில், ‘இது போர்க்களம் போல் தெரிகிறது. என் சகோதரனின் சன்னல் உள்ளே வீசியது மற்றும் அவரது முகத்தில் அடித்தது. என்ன நடந்தது என்பதை என்னால் நம்பமுடியவில்லை. அவர் தனது வீடு, உடமைகள் அனைத்தையும் இழந்துவிட்டார், ஆனால் அவர் உயிருடன் இருக்கிறார், கடவுளுக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.
மணிக்கு 75 மைல் வேகத்தில் வீசிய காற்று பல மாநிலங்களில் குறிப்பிடத்தக்க கட்டமைப்பு சேதத்தை ஏற்படுத்தியது. அதேவேளையில் புயல் பெரிய ஆலங்கட்டி மழை மற்றும் பல மாவட்டங்களில் மழை பெய்தது. இதற்கிடையில், அழிவின் முழு அளவையும் காலை வரை அறிய முடியாது என தேசிய வானிலை சேவையானது எச்சரிக்கை செய்துள்ளது.