Last Updated on: 12th May 2023, 09:53 am
மூன்றாம் சார்லஸ் மன்னராக முடி சூட்டிக் கொண்ட பிறகு 5 முக்கிய வினோத விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
மன்னர் முடிசூட்டு விழா
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து கடந்த செப்டம்பரில் அவரது மகன் மூன்றாம் சார்லஸ் பிரித்தானியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவ்வாறு மன்னர் மூன்றாம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக முடிசூட்டிக் கொண்ட பிறகு, அவர் வினோதமான 5 விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
5 முக்கிய விதிமுறைகள்:
மன்னர் சார்லஸ் இளவரசர் வில்லியமுடன் பயணிக்க கூடாதுசார்லஸ் மன்னராக முடி சூட்டிக் கொண்ட பிறகு, பிரித்தானியாவின் அடுத்த அரச வாரிசாக இருக்கும் அவரது மகன் இளவரசர் வில்லியமுடன் சேர்ந்து ஒரே விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.
ஏதேனும் தவறுதலாக விபத்து ஏற்பட்டால் அரச குடும்பத்தின் தலைமையில் இருக்கும் இரண்டு உயிருக்கும் ஆபத்து ஏற்படாமல் இருக்க இந்த விதிகள் அரச மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆடை விதிகள் மன்னர் சார்லஸ் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் போது நிச்சயமாக இராஜதந்திர ஆடைகளை அணிய வேண்டும், அதாவது சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாட்டின் உள்ளூர் பாரம்பரியத்தை மன்னரின் ஆடை பிரதிபலிக்க வேண்டும்.
ஆட்டோகிராப்கள் அல்லது செல்பி புகைப்படங்கள் கூடாதுபிரித்தானியாவின் மன்னராக செல்ஃபிகளுக்கு போஸ் கொடுக்கவோ அல்லது ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப்கள் கொடுக்கவோ கூடாது.
இந்த விதிமுறை பிரித்தானிய அரச குடும்பத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொருந்தும், இருப்பினும் இவை தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ விதிகளும் இல்லை.
உணவு கட்டுப்பாடுமட்டி மீன்களில்(shellfish) உள்ள நச்சுத்தன்மை காரணமாக அவற்றை பிரித்தானிய மன்னர் மற்றும் பிரித்தானிய அரச குடும்ப உறுப்பினர்கள் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்
.மேலும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மன்னர் சார்லஸ் அந்நியர்களிடம் இருந்து பெரும் உணவை ஏற்றுக் கொள்ள கூடாது.
பரிசுகளை ஏற்றுக் கொள்ள கூடாது:
பிரித்தானிய மன்னர் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்கள் சுற்றுப் பயணங்களின் போது அவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து பரிசுகளை ஏற்க வேண்டும்.ஆனால் பிரித்தானிய அரச குடும்பத்தின் பரிசு கொள்கையின்படி, பரிசு வழங்குபவரின் கடமையின் கீழ் வழங்கப்படும் எந்தவொரு பரிசையோ, சேவையையோ அல்லது விருந்தோம்பலையோ மன்னர் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ள கூடாது.
எந்தவொரு பரிசையும் நிராகரிக்கும் முன் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து கவனமாக பரிசீலிக்க வேண்டும் என்று அரச பரிசு கொள்கை எடுத்துரைக்கிறது.