Last Updated on: 30th June 2024, 11:09 am
, உலகின் மிக விலை உயர்ந்த பாட்டில் தண்ணீராக, ஜப்பானில் இருக்கும் ஃபிலிகோ ஜூவல்லரி நிறுவனத்தின் தண்ணீர் பாட்டில் இருந்து வருகிறது. இதன் விலை 1,390 டாலர். அதாவது இந்திய மதிப்பில், ஒரு லிட்டர் வாட்டர் பாட்டலின் விலை ரூ.1,16,000. ஃபிலிகோ ஜூவல்லரி நிறுவனத்தின் தண்ணீரை வேறுபடுத்திக் காட்டுவது தண்ணீரின் தூய்மை மட்டுமல்ல, அதன் ஆடம்பரமான பேக்கிங் முக்கிய காரணம். இந்த தண்ணீர் பாட்டில்கள் படிகங்களைப் போல செதுக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்டுள்ளன.
முதலில் இந்த தண்ணீர் கோபி என்ற இடத்தில் இருக்கும் இயற்கை நீரூற்றில் இருந்து எடுக்கப்படுகிறது. அது, மிகவும் அழகாக தரத்துடன் தயாரிக்கப்பட்ட பாட்டில்கள் நிரப்பி விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தண்ணீரின் விலை அதிகமாக நினைத்தாலும், இந்த தண்ணீர் பாட்டிலின் ஆடம்பரத்திற்காகவே பலரும் இதை வாங்குகிறார்கள்.