சீனாவில் விஞ்ஞானிகள் பூமியில் 10,000 மீட்டர் (32,808 அடி) துளை தோண்டத் தொடங்கியுள்ளனர்.
பூமிப் பாறையின் 10 அடுக்குகளைத் தோண்டி, 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கிரெட்டேசியஸ் சிஸ்டம் எனப்படும் அடுக்கு, பாறைகளை அடைவதற்காக இந்த முயற்சியை சீன விஞ்ஞானிகள் முன்னனெடுத்துள்ளனர்.
சீனாவின் ஆழமான ஆழ்துளைக் கிணறுக்கான துளையிடும் பணி செவ்வாயன்று நாட்டின் எண்ணெய் வளம் மிக்க ஜின்ஜியாங் பகுதியில் தொடங்கியது.
செவ்வாயன்று தொடங்கப்பட்ட இந்த திட்டம் கனிம வளங்களை அடையாளம் காணவும், பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்ற சுற்றுச்சூழல் அபாயங்களை மதிப்பிடவும் பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த துளை, பிரமிக்கக்கூடிய அளவிற்கு ஆழமானதாக இருந்தாலும், ஆனால் இது பூமியில் மனிதனால் உருவாக்கப்பட்ட ஆழமான துளையாக இருக்காது. ஏனெனில், அந்த பெருமை ஏற்கெனவே ரஷ்யாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கோலா தீபகற்பத்தில் உள்ள கோலா சூப்பர் டீப் போர்ஹோலுக்கு செல்கிறது.
மே 24, 1970 முதல் சோவியத் ஒன்றியத்தின் சரிவுக்குப் பிறகு வரை 20 வருடங்களுக்கு நீடித்த தொண்டலில், அந்த துளை கடல் மட்டத்திலிருந்து 11,034 மீட்டர் (36,201 அடி) உயரத்தை எட்டியது.பூமிக்கு அடியில் உள்ள பாறைகள் அவர்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் ஈரமாக இருப்பதை குழு கண்டறிந்தது.
ஆழ்துளைக் கிணறு அதைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு, விஞ்ஞானிகள் பாறையில் தண்ணீர் அவ்வளவு ஆழமாக ஊடுருவாது என்று நினைத்தார்கள். கிரானைட்டுக்கு அடியில் பாசால்ட் அடுக்கைக் கண்டுபிடிப்பார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தனர், மாறாக கிரானைட்டின் அடியில் உருமாற்ற கிரானைட் இருப்பதைக் கண்டறிந்தனர்.
இந்நிலையில், சீன அதன் முயற்ச்சியில் புதிதாக என்ன கடுபிடிக்கவுள்ளனர் என்பதில் விஞ்ஞானிகள் ஆர்வமாக உள்ளனர்.
🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)
⏳ Generating tags using Gemini API, please wait...