இந்த நாடுகளின் மக்கள் மட்டும் விசா இல்லாமல் வரலாம் – இலங்கை அறிவிப்பு

இந்த நாடுகளின் மக்கள் மட்டும் விசா இல்லாமல் வரலாம் – இலங்கை அறிவிப்பு

Last Updated on: 25th October 2023, 08:10 pm

ஒரு நாட்டின் குடிமக்கள் மற்றொரு நாட்டிற்குள் செல்ல விசா என்பது தேவை. சில நாடுகளுக்கு செல்வதற்கு எளிதாக விசா பெற்றுவிடலாம். அந்த நாட்டுக்கு சென்ற பிறகு கூட அங்கு விசா பெற்றுக்கொள்ளலாம். அப்படி எளிமையான விசா அணுகுமுறைகளை கடைப்பிடிக்கும் நாடுகள் இருக்கின்றன. அதேவேளையில் கடுமையான விசா நடைமுறைகளைப் பின்பற்றும் சில நாடுகள் உள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து இலங்கை செல்ல இனி விசா தேவை இல்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் இலங்கைக்கு விசா எடுக்காமல் சென்று வரலாம்.

மேலும் இந்தியா மட்டுமின்றி சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய 6 நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை ஒப்புதலுடன் இந்த திட்டம் மார்ச் 31 தேதி வரை சோதனை முயற்சியாக அமல்படுத்தப்படுகிறது என்றும் அறிவித்துள்ளது.

Leave a Comment