வேலை விசாவிற்கான விரல் அடையாளம் – தேதி நீட்டிப்பு..

சவுதிஅரேபியாவிற்கான வேலை விசாவிற்கு விரல் அடையாளம் பதிவு செய்வதற்கான நாள் ஜனவரி 31 முதல் துவங்கப்படும் என டெல்லியிலுள்ள சவுதி தூதரகம் தெரிவித்துள்ளது. அதே நேரம், இது குறித்து எந்த அறிவிப்பும் மும்பையில் உள்ள சவுதி தூதரகத்தில் இருந்து வெளியிடப்படவில்லை. முதலில் ஜனவரி 15 முதல் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் அதனை ஜனவரி 26 வரை என நீட்டிப்பு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.