அமீரகத்தில் இராணுவ வாகனங்கள் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் மீட்பு..

கடந்த இரண்டு நாட்களாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பல எமிரேட்களில் பெய்த கனமழையால் ஷார்ஜா, புஜைரா மற்றும் ராசல் கைமாவில் வெள்ளம் ஏற்பட்டது. புதன்கிழமை மாலை முதல் வெள்ளம் சூழ்ந்த வீடுகள், வாடிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் குடியிருப்பாளர்கள் சிக்கித் தவித்ததால், காவல்துறை மற்றும் அவசரக் குழுக்கள் குவிக்கப்பட்டு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.