வெறும் 350 கிராம் தான்: தெற்கு ஆசியாவிலேயே குறைந்த எடையுடன் பிறந்த ஆண் குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்!

முக்கிய நாளிதழ்கள் மற்றும் ஊடக இணையதளங்களில் இன்று (ஜனவரி 16) வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து இங்கே வழங்கியுள்ளோம்.

கேரள மாநிலத்தில் 350 கிராம் மட்டுமே எடையுள்ள ஆண் குழந்தை பிறந்ததாக, ‘தினத்தந்தி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அக்குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். தெற்கு ஆசியாவிலேயே குறைந்த எடையுடன் பிறந்த குழந்தையாக அந்த குழந்தை பார்க்கப்படுவதாக அச்செய்தி குறிப்பிடுகிறது.

“கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட சஷிஷா என்ற பெண்ணுக்கு 23 வாரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அதன் எடை 350 கிராம் மட்டுமே இருந்தது.

இதையடுத்து அந்த மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் மருத்துவ நிபுணர் ரோஜோ ஜாய் தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர் அந்த குழந்தையை தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைத்துப் தொடர்ந்து 100 நாட்கள் வைத்து சிகிச்சை அளித்தனர். தற்போது அந்த குழந்தை நலமுடன் இருப்பதாகவும், அதற்கு நோவா என்று பெயர் வைத்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Prayer Times