இன்ஸ்டாகிராமிலேயே முத்தலாக் தெரிவித்த துபாய் இளவரசி..!
துபாய் இளவரசி ஷைக்கா மஹ்ரா, தனது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷீத் பின் மனா அல் மக்தூமுக்கு இன்ஸ்டாகிராமில் விவாகரத்து வழங்கினார்.இளவரிசி ஷைக்கா, ஜூலை 16 அன்று வெளியிட்ட ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில், தனது கணவர் மற்ற கம்பனியன்களுடன் பிஸியாக இருப்பதால், அவரை உடனடியாக விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.
கூடவே முத்தலாக் முறையில் மூன்று முறை ‘I Divorce You’ எனத்தெரிவித்து, ‘இப்படிக்கு மாஜி மனைவி’ என பதிவிட்டிருந்தார்.இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.ஷைக்கா மஹ்ரா, தொழிலதிபர் ஷேக் மனா அல் மக்தூமை கடந்த மே 2023இல் மணந்தார்.இந்த தம்பதியினர் தங்கள் முதல் குழந்தையை இரண்டு மாதங்களுக்கு முன் வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
3,186 comments