சிங்கப்பூருக்கு மட்டும் அரிசி ஏற்றுமதிக்கு ஓகே சொன்ன இந்தியா… என்ன காரணம் தெரியுமா?

கடந்த ஜூலை மாதம் பாஸ்மதி அல்லாத பச்சை அரிசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. சமீப காலமாக அரிசி விலை உயர்ந்து வரும் நிலையில் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யவும் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது.

இந்நிலையில் கடந்த வாரம் மத்திய அரசு புழுங்கல் அரிசிக்கு 20 சதவீதம் ஏற்றுமதி விதித்தது. ஏற்கனவே அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் மத்திய அரசின் ஏற்றுமதி வரி விதிப்பால் உலக சந்தையில் அரிசி விலை உயரும் என தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் பாஸ்மதி அரிசி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதி தடையில் சிங்கப்பூருக்கு மட்டும் இந்தியா விலக்கு அளித்துள்ளது. சிங்கப்பூருடனான “சிறப்பு உறவை” கருத்தில் கொண்டு, தென்கிழக்கு நாடானா சிங்கப்பூர் நாட்டின் “உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய” அரிசி ஏற்றுமதியை அனுமதிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியா – சிங்கப்பூர் இடையே பொருளாதாரா ரீதியிலான உறவை தாண்டி, மக்கள் இடையேயான உறவும் பலமானது. இப்படி நெருங்கிய தொடர்பு உள்ளதால், சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி செய்ய இந்திய அரசு அனுமதித்துள்ள. சிங்கப்பூர் பெரும்பாலும் உணவுப் பொருட்களுக்கு இந்தியாவையே சார்ந்திருப்பதால், அரிசி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையில் விலக்கு அளிக்கும்படி அந்நாட்டு அதிகாரிகள் வலியுறுத்தினர்.

இதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை சிங்கபூருக்கான அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சியும் உறுதி செய்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் பாக்சி தெரிவித்தார்.தற்போது தடைசெய்யப்பட்ட வகையின் கீழ் உள்ள பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்வதைத் தடுக்க, ஆகஸ்ட் 27 ஆம் தேதி பாஸ்மதி அரிசியின் ஏற்றுமதியில் கூடுதல் பாதுகாப்பு விதிகளை மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அரிசி ஏற்றுமதியில் உள்ள தடையையும் கட்டுப்பாடுகளையும் நீக்குவது குறித்து இந்தியா பரிசீலிக்க வேண்டும் என நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

உலகம் முழுவதுமே உணவு பொருட்களின் விலை ஏறு முகத்தில் உள்ளது. பருவநிலை மாற்றத்தால் ஒரு சில நாடுகளில் கொட்டித் தீர்த்த மழை, ஒரு சில நாடுகளில் வாட்டி வதைத்த வெயில் போன்றவை தானிய உற்பத்தியில் பாதிப்பை ஏறபடுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் ரஷ்யா – உக்ரைன் போரால் உணவு விநியோக சங்கிலியில் ஏற்பட்ட தடையும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

1 comment

  • comments user
    binance

    Your article helped me a lot, is there any more related content? Thanks!

    Post Comment

    You May Have Missed