செரிமானம் நமது உடலில் தினசரி நடக்க வேண்டிய ஒரு விடயமாகும். செரிமானம் சரியாக நிகழவில்லை என்றால் அது நோய் எதிர்ப்புச் சக்தியையும் பாதிக்கும்.
நமது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க பல உறுப்புகள் இணைந்து செயல்படுகின்றன. அதிலும் இதில் முக்கியமாக குடலிற்கு முக்கிய பங்கு இருகின்றது என்று யாரும் அறிந்ததே.
இந்த குடல் தான் உடலில் உள்ள ஆரோக்கியமற்ற நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது எனலாம்.
ஆம். குடலில் முறையாக நடக்கவேண்டிய செயன்முறை நடக்கவில்லை என்றால் ஒரு சில அறிகுறிகள் தென்படுமாம். அது பற்றி விரிவாக இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
அதிக சர்க்கரை பசி இருந்தால் அது உங்கள் குடல் ஆரோக்கியமற்று இருப்பதாக கூறுகின்றது.
காலையில் எழுந்தவுடன் சோர்வாக மற்றும் பலவீனமாக உணர்ந்தால், குடலில் பிரச்சினை உள்ளது.
மாதவிடாய் ஒழுங்கற்றதாக இருப்பதும் குடல் ஆரோக்கியத்தின் மோசமான அறிகுறிகளில் ஒன்றாகும்.
அடிக்கடி நோய்கள் வந்துக்கொண்டிருந்தால் குடல் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் இருக்கலாம்.
நல்ல தூக்கம் வரவில்லையென்றாலும் குடலில் ஏதோ ஒரு பிரச்சினை தான்.
உணவை விழுங்குவதிலும் சாப்பிட்ட பிறகு குமட்டல் ஏற்பட்டாலும், குடல் ஆரோக்கியமற்று இருக்கும்.
எவ்வாறு விடுப்படலாம்?
- உணவை சரியாக மென்று சாப்பிட வேண்டும்.
- உணவில் தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள்.
- வறுத்த மற்றும் காரமான உணவுகள் சாப்பிடுவதை முற்றிலும் குறைத்துக்கொள்ள வேண்டும்.
- சமநிலை உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
- மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்.
🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)
⏳ Generating tags using Gemini API, please wait...