Last Updated on: 30th May 2023, 10:59 am
மஹ்சூஸ் டிராவில் வெற்றி பெற்று சமீபத்திய கோடீஸ்வரராக மாறியுள்ள அபுதாபியில் வசிக்கும் விபின் என்பவருக்கு, அவரது நீண்ட நாள் கனவாக இருந்த திருமணம் நிஜமாக உள்ளது. ஆம், அவர் ரேஃபிள் பரிசை வென்றதை உணர்ந்தபோது முதலில் நினைத்தது அவரது நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்ட திருமணத்தைத் தான். மேலும், குறைந்த வருமானம் காரணமாக பல்வேறு நிராகரிப்புகளை எதிர்கொண்ட விபினுக்கு மஹ்சூஸ் டிராவில் கிடைத்த 1 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத் தொகை, அவரது வாழ்க்கையை மாற்றும் தொகை என்பதில் சந்தேகமில்லை.
அபுதாபியில் உள்ள தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தில் பணிபுரியும் விபின், கடந்த மே 20 சனிக்கிழமையன்று, 1 மில்லியன் திர்ஹம்களின் ‘Guaranteed’ ரேஃபிள் பரிசை வென்றதில் மஹ்சூஸ் டிராவின் 44வது மில்லியனர் ஆனார். மேலும், அதன் 129வது டிராவில் கூடுதலாக 1,645 வெற்றியாளர்கள் 1,601,500 திர்ஹம்களை பரிசுத் தொகையாகப் பெற்றுள்ளனர்.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் குறைவாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் விபின், நான்கு மாதங்களுக்கு முன்புதான் மஹ்சூஸ் டிராவில் பங்கேற்கத் தொடங்கியுள்ளார். மேலும், அதிலிருந்து குறைந்தபட்சம் 30 லைன்களை வாங்கியுள்ளார். இந்த வெற்றி குறித்து விபின் கூறுகையில், 1 மில்லியன் திர்ஹம் வென்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், இதனால் அவர் திருமணம் செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திருமண சம்பிரதாய நிகழ்வுகள் மிகவும் விலை உயர்ந்தவை என்று அவர் தெரிவித்துள்ளார். புதிய கோடீஸ்வரரான விபினுக்கு முதலில் திருமணம், அடுத்து தனது மூத்த சகோதரருக்கு சொந்த ஊரில் ஒரு சிறிய வீட்டை வாங்குவதுடன், ஒரு புதிய கார் ஒன்று வாங்கும் எண்ணமும் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக விபின் மஹ்சூஸ் டிராவில் அவரது மூன்றாவது முயற்சியில் 350 திர்ஹம்களை ஏற்கனவே வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.