Last Updated on: 30th May 2023, 10:54 am
ஐக்கிய அரபு அமீரகத்தின் கோர் ஃபக்கனில் உள்ள ஷார்க் ஐலேண்டு (Shark Island) அருகில் இரண்டு உல்லாச படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அபாயத்தில் சிக்கித் தவித்த 7 இந்தியர்களை ஐக்கிய அரபு அமீரக கடலோர காவல்படை பத்திரமாக மீட்டுள்ளது.
கடலில் படகு கவிழ்ந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும், விபத்து நடந்த இடத்திற்கு சிறப்பு மீட்புக் குழுக்கள் வந்தடைந்தன. மேலும், இந்த விபத்தில் ஒரு பெண் மற்றும் அவரது குழந்தை காயம் அடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அவர்கள் இருவரும் உடனடியாக நேஷனல் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், மோசமான வானிலையின் போது எச்சரிக்கையாக இருக்கவும் கடலோரக் காவல்படை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.