சவுதி அரேபியாவிற்குச் செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால், நீங்கள் எடுத்துச் செல்லும் பொருள்களின் (Luggage) வகை தொடர்பாக சில விதிமுறைகள் உள்ளன, அதை நினைவில் கொள்வது அவசியம். கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி ஜெத்தாவில் உள்ள கிங் அப்துல் அஜிஸ் சர்வதேச விமான நிலையம், பயணிகள் குறிப்பிட்ட வகை பொருட்களை எடுத்துச் செல்வதற்கு தடை மற்றும் வரம்புகள் இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளது. அவை,
- கயிறுகளால் கட்டப்பட்ட பைகள்
- துணியால் சுற்றப்பட்ட பைகள்
- உருண்டையாக அல்லது ஒழுங்கற்ற வடிவத்தில் உள்ள பைகள்
- உங்கள் டிக்கெட்டில் உள்ள எடை தேவைகளுக்கு இணங்காத பைகள்
- துணி சாமான்கள் (cloth luggage)
- நீண்ட வார்கள் (Strap) கொண்ட பைகள்
உங்கள் லக்கேஜ் தொலைந்துவிட்டால் என்ன செய்வது?
சவுதிக்கு பயணம் செய்த இடத்தில் நீங்கள் கொண்டு வந்த உங்களது லக்கேஜை எதிர்பாராத விதமாக தொலைத்து விட்டால், உடனடியாக உதவிக்கு சிவில் விமான போக்குவரத்து பொது ஆணையத்தை அணுகலாம்.
எப்படி அணுகுவது?
பயணிகளின் லக்கேஜ் வர தாமதமாகினாலோ, தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, விமான கேரியரிடம் இருந்து இழப்பீடு கோருவதற்கு பயணிகளுக்கு உரிமை உண்டு. ஆகவே, கஸ்டமர் கேர் கம்யூனிகேஷன் சேனல்கள் மூலம் 24 மணி நேரமும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று GACA ஏப்ரல் 15 அன்று ட்வீட் செய்துள்ளது. அதன்படி 011 525 3333 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவும், @gacaCare என்ற ட்விட்டர் கணக்கு மூலமாகவும் அல்லது [email protected] மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் தொடர்பு கொள்ளுமாறு GACA தெரிவித்துள்ளது.
ஜம்ஜம் தண்ணீரை எடுத்துச் செல்லுதல்:
சவுதியின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் கடந்த மே 12 அன்று, ஜம்ஜம் தண்ணீரை தங்களுடன் எடுத்துச் செல்ல விரும்பும் பயணிகள் பின்வரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியிருந்தது:
1. முக்கிய விற்பனை மையங்களில் ஒன்றிலிருந்து ஜம்ஜம் வாட்டர் பாட்டிலை வாங்கவும். அதுவும் 5 லிட்டர் பாட்டில் மட்டுமே அனுமதி.
2. உங்கள் சரிபார்க்கப்பட்ட லக்கேஜில் ஜம்ஜம் தண்ணீர் பாட்டிலை வைக்க வேண்டாம்.
3. ராஜ்யத்தை விட்டு வெளியேறும் ஒவ்வொரு உம்ரா செய்பவருக்கும் ஒரு பாட்டில் மட்டுமே அனுமதிக்கப்படும்.
4. நுசுக் என்ற ஹஜ் மற்றும் உம்ராவுக்கான தேசிய ஆன்லைன் தளத்தில் விண்ணப்பித்து உம்ரா பதிவுக்கான ஆதாரத்தை பயணிகள் வழங்க வேண்டும்.