பிரதான எதிர்க்கட்சிகளே இல்லாத நிலையில் நடைபெற்ற தேர்தலில், அதிபர் புதின் 87 சதவிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.2000-ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபரான புதின், 2004, 2012 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் ஏற்கெனவே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 5வது முறையாக ரஷ்யாவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 24 ஆண்டுகளாக ரஷ்யாவின் உயர் பதவியில் நீடிக்கும் புதின், அடுத்த 7 ஆண்டுகளுக்கும் அதிபராக நீடிக்கவுள்ளார். இதன் மூலம், ரஷ்ய வரலாற்றில் கடந்த 200 ஆண்டுகளில் எந்த தலைவரும் இல்லாத வகையில், நீண்ட காலம் உச்சபட்ச பதவியில் இருந்தவர் என்ற பெருமையை புதின் பெற்றுள்ளார்.