9.3 C
Munich
Monday, October 7, 2024

பனியில் உறைந்த மலையேற்ற வீரரின் உடல்… 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்பு!

பனியில் உறைந்த மலையேற்ற வீரரின் உடல்… 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்பு!

Last Updated on: 9th July 2024, 10:32 pm

தென் அமெரிக்க நாடான பெருவில் சுமார் 22 ஆயிரம் அடி உயரம் கொண்ட ‘ஹஸ்கரான்’ மலை அமைந்துள்ளது. இந்த மலையில் கடந்த 2002-ம் ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் ஸ்டாம்பிள் என்ற மலையேற்ற வீரர் பனிச்சரிவில் சிக்கி மாயமானார். பின்னர் நீண்ட நாட்களாக தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால், தேடுதல் பணி கைவிடப்பட்டது.

இந்த நிலையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு வில்லியம் ஸ்டாம்பிளின் உடல் ஹஸ்காரன் மலையில் உள்ள கார்டிலெரா பிளாங்கா மலைத்தொடரில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது உடல், உடைகள், மலையேற்றக் கருவிகள் மற்றும் காலணிகள் ஆகியவை பனியில் உறைந்து பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது உடைமைகளில் இருந்த பாஸ்போர்ட் மூலம் வில்லியம் ஸ்டாம்பிளினை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here