Last Updated on: 18th August 2024, 10:08 am
பெர்லின்: பொருளாதார ரீதியில் முன்னேற்ற தடைகளை தவிர்க்க இந்தியாவில் இருந்து வரும் பணி நிமித்த விசா விண்ணப்பத்தை விரைந்து ஏற்று உரிய ஆணை வழங்கிடும் காலத்தை வெகுவாக குறைக்க ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது.
ஜெர்மனியை பொறுத்தவரை இந்தியர்கள் பணி நிமித்த விசாவுக்கு 9 மாத காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. இது இந்தியர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. குறிப்பாக ஜெர்மனியில் பல்வேறு இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இந்த நிறுவனங்களில் திறன் சார்ந்த பணியாளர்களை ஜெர்மனிக்கு அனுப்புவதில் காலதாமதம் ஆவதுடன் உற்பத்தி விஷயத்திலும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
ஜெர்மன் நிறுவனங்களும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி வந்தன. இதன் காரணமாக விஷயங்களை மத்திய அரசு உதவியுடன் இந்திய நிறுவனங்கள் ஜெர்மனி அரசுடன் பல்வேறு பேச்சுக்கள் நடத்தின. இந்த பேச்சில் சுபமான முடிவு எட்டியுள்ளது.
9 மாதத்தில் இருந்து 2 வாரங்களாக
ஜெர்மனி வெளியுறவு துறை அமைச்சர் அன்னேலானா பியேர்பக் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். ‘ இந்தியர்களுக்கான விசா வழங்கிட எடுக்கப்படும் காலம் 9 மாதத்தில் இருந்து 2 வாரங்களாக குறைக்கப்பட்டுள்ளது. வேகமாக விசா வழங்கப்படும். எங்களுக்கு ஆதரவாக செயல்படும் இந்திய திறன் வாய்ந்த பணியாளர்கள் மிக அவசரமாக தேவைப்படுகிறது. இதனை நிவர்த்தி செய்ய இந்த முடிவுக்கு வந்துள்ளோம்’ என கூறியுள்ளார்.ஒரு புள்ளிவிவரப்படி ஜெர்மனுக்கு விசா தாமதம் காரணமாக ஏறத்தாழ 4 லட்சம் பேர் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
தற்போதைய ஜெர்மனி அரசின் விசா விண்ணப்ப கால குறைப்பால் இந்தியர்களுக்கு மகிழ்வை தந்துள்ளது.5லட்சத்திற்கும் மேல் காலி பணியிடம்விசா தாமதம் மற்றும் நீண்ட கால பயிற்சி ஆகியவற்றால் கடந்த 2023 ல் 5 லட்சத்து 70 ஆயிரம் பணியிடங்கள் ஜெர்மனியில் நிரப்பப்படாமல் இருந்ததாக ஒரு புள்ளி விவர அறிக்கை தெரிவிக்கிறது. 2024 ஜனவரி முதல் ஜூன் வரை 80 ஆயிரம் பேருக்கு பணி விசா வழங்கப்பட்டுள்ளது.
விசா விண்ணப்ப விரய கால குறைப்பும், இந்திய திறன் வாய்ந்த பணியாளர்கள் ஜெர்மனிக்கு வேகமாக வருவதன் மூலம் ‘ பொருளாதாரத்தில் ஐரோப்பாவின் நோய்க்கால மனிதனை காப்பாற்ற முடியும் ‘ என்கின்றனர் ஜெர்மனி கம்பெனி நிறுவனத்தினர்.