நடுவானில் துண்டாக உடைந்த விமானத்தின் கதவு.. அடுத்த நடந்தது என்ன? வைரல் வீடியோ

போர்ட்லாண்டில் இருந்து கிளம்பிய அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென அதனின் கதவு உடைந்து விமானத்தை விட்டு பிரிந்து சென்றது. இதன் காரணமாக போர்ட்லாண்டு விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.இன்று (06.01.2024) காலை அலாஸ்கா ஏர்லைன்ஸ் போயிங் 737-9 மேக்ஸ் 1282 விமானம் போர்ட்லாண்டில் இருந்து கலிபோர்னியாவில் உள்ள ஒன்டாரியோவிற்கு 171 பயணிகள் மற்றும் 6 குழு நபர்களுடன் கிளம்பியது. சுமார் 16,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஒரு கதவு திடீரென உடைந்து விமானத்தை விட்டு பிரிந்து சென்றது.

இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பெரும் அச்சத்திற்கு உள்ளானர். கதவு பிரிந்து சென்றபின் விமான பயணிகள் எடுத்த வீடியோகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. பாதுகாப்பு காரணத்திற்காக உடனடியாக மீண்டும் விமானம் போர்ட்லாந்து சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அலாஸ்கா ஏர்லைன்ஸ், AS1282 விமானத்தில் ஏற்பட்ட நிகழ்வு காரணமாக 171 பயணிகள் மற்றும் 6 குழு நபர்களுடன் பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டது என தெரிவித்துள்ளது.மேலும், இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடந்தப்படுவதாகவும் தெரிவித்தது. அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பும் இந்த சம்பவத்தை உறுதி செய்தனர். தொடர்ந்து., இது குறித்து உடனடி விசாரணை நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times