Last Updated on: 21st August 2024, 09:49 pm
சீனாவின் Zhejiang மாகாணத்தில் உள்ள Quzhou பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி காணாமல் போனதும் உதவி பெற ஏடிஎம்மைப் பயன்படுத்தியுள்ளார்.அவளுடைய உயிர் பிழைக்கும் உள்ளுணர்விற்காகப் தற்போது பாராட்டப்பட்டு வருகிறார்.ஜூலை 30 ஆம் தேதி சிறுமி தனது நடன வகுப்பில் இருந்து வீடு திரும்பியபோது, எதிர்பாராதவிதமாக அவளுடைய தாத்தாவிடம் இருந்து பிரிந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.கையில் மொபைல் ஃபோன் அல்லது பரிச்சயமான முகங்கள் ஏதும் இல்லாமல் போகவே கவலையடைந்த அந்த சிறுமி, துரிதமாக செயல்பட்டு ஒரு தனித்துவமான தீர்வைக் கண்டுபிடித்தாள்.
ஏடிஎம்மின் அவசர பட்டன் தன்னை காப்பாற்றும் என யூகித்த சிறுமி
தனது அவசர நிலையில், அந்த சிறுமி அருகில் உள்ள ஏடிஎம் பூத்தை பார்த்துள்ளாள். அதை உதவிக்கு பயன்படுத்த முடிவு செய்தாள்.வங்கியின் கண்காணிப்பு மையத்துடன் இணைக்கு இயந்திரத்தின் அருகே இருந்த சிவப்பு பொத்தானை சிறுமி அழுத்தினாள்.Quzhou Rural Commercial Bank இல் பணிபுரியும் Zhou Dongying, இண்டர்காம் அமைப்பு மூலம் அவரது அழைப்புக்கு பதிலளித்தார்.தாத்தாவின் தொலைபேசி எண் அல்லது அவரது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களை நினைவில் வைத்திருக்கிறீர்களா என்று Zhou அந்தப் பெண்ணிடம் கேட்டபோது, அவள் இல்லை என்று சொன்னாள்.