17 டாக்டர்களால் முடியல.. நொடிகளில் செய்து காட்டிய சாட்ஜிபிடி.. 4 வயது குழந்தை உயிர் பிழைத்தது! வாவ்

வாஷிங்டன்: கடந்த 3 ஆண்டுகளாக 17 டாக்டர்களால் கண்டுபிடிக்கவே முடியாத நோய்ப் பாதிப்பை சாட்ஜிபிடி நொடிகளில் கண்டுபிடித்துள்ளது. இதனால் 4 வயது சிறுவனின் உயிரும் காப்பாற்றப்பட்டு இருக்கிறது.

இந்த காலத்தில் ஏஐ கருவிகள் வேற லெவல் வளர்ச்சி அடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக சாட் ஜிபிடி வந்த பிறகு ஏஐ கருவிகள் பெரும் பாய்ச்சலை அடைந்துள்ளன. ஏஐ கருவிகள் குறித்த ஆய்வுகளும் கூட மிகத் தீவிரமாக நடந்து வருகிறது.

இப்படி ஏஐ கருவிகளின் வளர்ச்சி பல்வேறு தொழிற்துறையினருக்கும் மிக பெரியளவில் உதவி இருக்கிறது. இதனால் பல்வேறு துறைகளும் மிகப் பெரிய மாற்றத்திற்கு ரெடியாகி வருகிறது. நாம் இணைத்துக் கூட பார்க்காத பல துறைகளில் ஏஐ மாற்றங்களைச் செய்து வருகிறது

பல் வலி: அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. பெண் ஒருவரின் 4 வயது மகன் அலெக்ஸுக்கு நீண்ட காலமாகப் பல் வலி இருந்துள்ளது. தினமும் பல் வலியால் அந்த சிறுவன் அலெக்ஸ் துடிதுடித்துப் போய் இருக்கிறான். இதனால் அவனது தாயார் எப்போதும் அவனுக்கு மோட்ரின் என்ற வலி நிவாரண மருந்தைத் தருவாராம். பல் வலியால் அலெக்ஸ் அலறி துடிக்கும் நிலையில், இந்த மோட்ரின் என்ற வலி நிவாரண மாத்திரையைச் சாப்பிட்டால் மட்டுமே அவன் நார்மல் ஆவானாம்.கொரோனா காலத்தில் சிறுவனுக்கு இந்த பல் வலி ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அலெக்ஸ் தனது மகனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். பல மருத்துவரிடம் சென்றாலும் என்ன பாதிப்பு என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

வளர்ச்சி இல்லை: இடைப்பட்ட காலத்தில் பல் வலியுடன் மற்றொரு பிரச்சினையும் வந்துவிட்டது. அதாவது அலெக்ஸ் வளரவில்லை. சில காலமாகவே அவன் எடை மற்றும் உயரத்தில் எந்தவொரு வளர்ச்சியும் இல்லை. இதனை கவனித்த அவர்கள் மருத்துவர்களிடம் கேட்டுள்ளனர். அவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், அதன் பக்க விளைவுகளாக இருக்கலாம் என்றும் இதனால் தான் அவன் வளரவில்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில், “நாங்கள் பல மருத்துவர்களைப் பார்த்தோம். யாராலும் என்ன பிரச்சினை எனக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. சில சமயம் பல் வலி தாங்க முடியாமல் எமர்ஜென்சி ரூம்களுக்கும் செல்ல வேண்டி இருந்தது. இது நீண்ட காலமாகத் தொடர்ந்த நிலையில், நானே இணையத்தில் இது குறித்து விரிவாக படிக்கலாம் என்று முடிவு செய்தேன்” என்று அவர் தெரிவித்தார்.

17 மருத்துவர்கள்: இவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 17 மருத்துவர்களிடம் சென்றுள்ளனர். இருப்பினும், எந்தவொரு நபராலும் அவருக்கு என்ன பாதிப்பு என்பதைக் கண்டறியவே முடியவில்லை. இதையடுத்து அவர் பெண் சாட்ஜிபிடியிடம் இது குறித்துக் கேட்க முடிவு செய்துள்ளார். அப்போது சாட்ஜிபிடி தான் அலெக்ஸுக்கு என்ன பாதிப்பு என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடித்து இருக்கிறது.

அலெக்ஸுக்கு டெதர்ட் கார்டு சிண்ட்ரோம் எனப்படும் அரிய நரம்பியல் நோய் இருப்பதை சாட்ஜிபிடி சரியாகக் கண்டுபிடித்து இருக்கிறது. அலெக்ஸின் எம்ஆர்ஐ ஸ்கேன் ரிப்போர்ட் அனைத்தையும் அவர் சாட்ஜிபிடியில் பதிவிட்டுள்ளார். மேலும், அவன் வெளிப்படுத்தும் அறிகுறிகளையும் குறிப்பிட்டுள்ளார். அப்போது தான் சாட்ஜிபிடி இதைத் தெரிவித்துள்ளது. இருப்பினும், முதலில் இதை அவரால் நம்பவே முடியவில்லை. இதை உறுதி செய்ய அவர் தனது மகனை நரம்பியல் மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.

உயிர் பிழைத்த குழந்தை: அவரும் அலெக்ஸுக்கு டெதர்ட் கார்டு சிண்ட்ரோம் நரம்பியல் பாதிப்பு இருக்கலாம் என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு அலெக்ஸ் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். சில வாரங்கள் மருத்துவ பரிசோதனையில் இருந்த அலெக்ஸுக்கு அதன் பிறகு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இப்போது அவரது உடல்நிலை எவ்வளவு பரவாயில்லையாம்.

அதேநேரம் மருத்துவர்களாலேயே கண்டுபிடிக்க முடியாத நோய்களை சாட்ஜிபிடி கண்டுபிடிப்பது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே சில சமயம் இதுபோல நடந்துள்ளது. கடந்த மார்ச் மாதம், இதுபோலத் தான் நாய் ஒன்றுக்கு ஏற்பட்ட நோயை மருத்துவர்களாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை. அந்தச் சம்பவத்திலும் சாட் ஜிபிடி தான் அந்த நோய்ப் பாதிப்பைக் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times