Last Updated on: 24th May 2023, 08:37 am
அர்ஜென்டினாவில் மிகப்பெரிய மதிப்புடைய ரூபாய் நோட்டான இரண்டாயிரம் பெசோ பில் திங்கள்கிழமை (மே 22) புழக்கத்திற்கு வந்தது.
புதிய 2000 பெசோ நோட்டு:
இருப்பினும், நாட்டின் நாணயத்தின் தேய்மானம், அதிகாரப்பூர்வ மாற்று விகிதத்தில் 2000 பெசோக்களின் மதிப்பு வெறும் 8.50 அமெரிக்க டொலர் (இலங்கை) தான். அதிலும், பொதுவாகப் பயன்படுத்தப்படும் இணைச் சந்தைகளில் அதன் மதிப்பு (அதில் பாதி) வெறும் 4 அமெரிக்க டொலர்கள் தான் (இந்திய பணமதிப்பில் ரூ.332). அதாவது 2000 பெசோ வெறும் 950 பெசோவாக இருக்கிறது.இந்த ஆண்டு மட்டும், பெசோ அமெரிக்க டொலருக்கு எதிரான அதன் மதிப்பில் கால் பங்கு குறைந்துள்ளது.
பணவீக்கத்துடன் போராடும் அர்ஜென்டினா:
அர்ஜென்டினா தற்போது 109 சதவீத பணவீக்க விகிதத்துடன் போராடி வருகிறது. இது உலகின் மிக உயரமான ஒன்றாகும். இந்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்கம் கிட்டத்தட்ட 130 சதவீதத்தை எட்டும் என்று மத்திய வங்கி கருத்துக் கணிப்பு மதிப்பிட்டுள்ளது. வட்டி விகிதங்கள் பாரியளவில் 97 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளன.இதற்கு முன்பு 1,000 பெசோ பில் தான் மிகப்பெரிய வங்கி நோட்டு இருந்தது.
புதிய 2,000 ரூபாய் நோட்டு அர்ஜென்டினாவில் அறிவியல் மற்றும் மருத்துவத்தின் வளர்ச்சியை நினைவுபடுத்தும் வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.