9.1 C
Munich
Thursday, September 12, 2024

பிரான்ஸ் விசா: கவனம் செலுத்தவேண்டிய சில விடயங்கள்

Must read

Last Updated on: 25th June 2023, 10:23 am

பிரான்ஸ் விசா பெறும்போது கவனம் செலுத்தவேண்டிய சில விடயங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

விசாக்களில், பணி விசா, கல்வி விசா, கணவன் அல்லது மனைவிக்கான விசா, visitor விசா, talent விசா என பலவகை உண்டு என்பதை பலரும் அறிந்திருக்கலாம்.

பிரான்ஸ் விசா பெறும்போது கவனம் செலுத்தவேண்டிய சில முக்கிய விடயங்கள்

முன்கூட்டியே திட்டமிடவேண்டும்

விசா மையத்தில் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு பதிலாக, பிரான்ஸ் தூதரகத்திலேயே விண்ணப்பித்தால் கூடுதல் கட்டணத்தைத் தவிர்க்கலாம்.

கடைசி நேரத்தில் விசாவுக்காக விண்ணப்பிப்பதைவிட, முன்கூட்டியே திட்டமிட்டால் 90 நாட்கள் Schengen விதியை மீறுவதைத் தவிர்க்கலாம்.

தனியாக விண்ணப்பிப்பதைவிட விசாவுக்கு விண்ணப்பிக்கும் மற்றவர்களுடன் இணைந்து கொள்வது நல்லதுகுறிப்பாக முதன்முறை விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது ஏராளமான சந்தேகங்கள் இருக்கும். ஆகவே, தனி ஆளாக விண்ணப்பிப்பதைவிட, விசாவுக்கு விண்ணப்பிக்கும் மற்றவர்களுடன் இணைந்து கொள்வது நல்லது.உதாரணமாக பிரான்ஸ் விசாவுக்கு விண்ணப்பிக்கும் (நம்பகமான) பேஸ்புக் குழுக்கள் போன்றவற்றை பயன்படுத்துவது மிகுந்த பலனளிக்கும்.மொழிப்பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில், சட்டத்தரணி ஒருவரின் உதவியை நாடுவது பலனளிக்கும்.   

விண்ணப்பப்படிவத்தில் என்ன வரிசையில் ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளனவோ, அதே வரிசையில் ஆவணங்களை அடுக்கிவைத்துக்கொள்ளுங்கள், நகல்களுடன்… 

பிரான்ஸ் தூதரகம் மற்றும் விசா மைய இணையதளத்தில் என்னென்ன ஆவணங்கள் தேவை என குறிப்பிடப்பட்டுள்ளனவோ, அத்தனை ஆவணங்களையும் மீண்டும் மீண்டும் சரி பார்த்து தயாராக வைத்துக்கொள்ளுங்கள். இன்னொரு முக்கியமான விடயம், விசா தயாரானதும், நீங்களே நேரடியாக விசா மையத்துக்குச் சென்று விசாவைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனென்றால், தபால் மூலம் விசா பெறும்போது, ஒருவேளை பாஸ்போர்ட் தவறிவிட்டால், அதைவிட டென்ஷனை ஏற்படுத்தும் விடயம் வேறு எதுவும் இருக்கமுடியாது. சரியான அனைத்து ஆவணங்களுடன், குறைந்தது நான்கு நகல்களாவது எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். பிரான்ஸ் யூரோ வங்கிக்கணக்கு ஒன்றில் போதுமான அளவு தொகையை வைத்துக்கொள்வதை உறுதி செய்துகொள்ளுங்கள். சந்தேகங்கள் இருந்தால் கூடுதல் ஆவணங்களைக் கையில் வைத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, ஸ்காலர்ஷிப், முகவரியை நிரூபிக்க ரசீதுகள் போன்றவை… 

அசல் ஆவணத்தைக் கேட்டால், அசலைக் கொடுங்கள். நகலைக் கேட்டால் நகலை இணையுங்கள். இதைச் சரியாக செய்யவில்லை என்றால் பலன் கிடைக்காது. 

மேலும், மருத்துவக் காப்பீடு, நீங்கள் தங்குமிடத்தை உறுதி செய்யும் ஆவணங்கள் ஆகியவற்றை வைத்துக்கொள்ளுங்கள். 

First Impression முக்கியம் நேர்த்தியாக, மரியாதைக்குரிய விதத்தில் உடை அணிந்துகொள்வது நல்ல பலனளிக்கும் என்கிறார்கள் அனுபவப்பட்ட பலர்! உங்கள் பிரெஞ்சு மொழி பேசும் திறன் நன்றாக இல்லையென்றால், முதலிலேயே அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுங்கள். ஜோக்கடிக்காதீர்கள், கேட்கும் ஆவணத்தை எடுத்துக் கொடுங்கள், கூடுதல் ஆவணங்கள் கேட்கப்பட்டால், அவை உங்களிடம் இல்லையென்றால் அப்செட் ஆகாதீர்கள்.

பிரெஞ்சு மொழியிலேயே பேசுங்கள், ஒருபோதும் ஆங்கிலம் வேண்டாம் என்கிறார் அனுபவப்பட்ட மற்றொருவர்!  

சீக்கிரம் திருப்திப்பட்டுக்கொள்ளாதீர்கள்.

 பிரான்சைப் பொருத்தவரை, ஆவண சரிபார்த்தல் என்பது எளிதில் முடிந்துவிடும் விடயம் என நம்பி திருப்திபட்டுக்கொள்ளக்கூடாது. நீங்கள் இரண்டாவது முறையும் ஒரு நேர்காணலுக்கு அழைக்கப்படலாம். மேலும், விசா கையில் கிடைத்தபிறகும் கூட, பிரான்ஸ் வந்து சேர்ந்த பின்பும், சில விடயங்களை நீங்கள் செயவேண்டியிருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். 

நீங்கள், VLS-TS holder அல்லது நீண்ட கால விசா வைத்திருப்பவர் என்றால், அதை ஒன்லைன் போர்ட்டலில் validate செய்யவேண்டியிருக்கும். அப்போது உங்களுக்கு அதற்கான ரசீது ஒன்று கிடைக்கும். நீங்கள் மீண்டும் புலம்பெயர்தல் அலுவலகத்திலிருந்து அழைப்பைப் பெறலாம். மருத்துவ பரிசோதனைக்கான அழைப்பு அல்லது புலம்பெயர்தல் ஏஜண்ட் ஒருவருடன் உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் பெறுவது தொடர்பில் உங்களுக்கு அவர்கள் தகவல் கொடுக்கலாம். 

மொத்தத்தில், முன்கூட்டியே தயாராக இருத்தல், தேவையான விடயங்கள் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி வைத்திருத்தல், தாமதங்களை தவிர்க்க உதவும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article