Last Updated on: 6th August 2023, 06:04 pm
கராச்சி: பாகிஸ்தானின் ஷஹீத் பெனாசிர்பாத் மாவட்டத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து அபோதாபாத் வரை ஹஸாரா எக்ஸ்பிரஸ் ரயில், ஷஹீத் பெனாசிர்பாத் மாவட்டத்தில் உள்ள நவாப்ஷா பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. நவாப்ஷாவுக்கும் ஷாஹ்தாபூருக்கும் இடையே சஹாரா ரயில் நிலையத்திலிருந்து புறப்புட்டுச் சென்றபிறகு இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 80 பேர் படுகாயமடைந்துள்ளனர். தடம்புரண்ட பத்து பெட்டிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதே போல கடந்த 2021ஆம் ஆண்டு இதே சிந்து மாகாணத்தில் ரயில் பெட்டிகள் தடம்புரண்டதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பல ஆண்டுகளாக பாகிஸ்தானின் ரயில்வே துறையை மேம்படுத்த அரசாங்கங்கள் முயன்று வரும் நிலையில், நிதிப் பற்றாக்குறை காரணமாக அது நிறைவேறாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.