Last Updated on: 9th July 2023, 09:10 am
சவுதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையம், விமான பயணிகள் குறிப்பிட்ட 30 பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதித்துள்ளது. மேலும், தடையை மீறி எடுத்துச் செல்லும் பட்சத்தில் அத்தகைய பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், அவற்றைக் கோர பயணிகளுக்கு உரிமை இல்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே, ஹஜ் யாத்திரை முடிந்து புறப்படும் யாத்ரீகர்கள் இந்த ஆபத்தான மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை தங்கள் சாமான்களில் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று விமான நிலையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
கேபின் லக்கேஜ்ஜில் தடை செய்யப்பட்ட பொருட்கள்:
தடை செய்யப்பட்ட பொருட்களில், 16 பொருட்களை விமான கேபின்களில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களில் கத்திகள், அழுத்தப்பட்ட வாயுக்கள், நச்சு திரவங்கள், கத்திகள், பேஸ்பால் மட்டைகள், ஸ்கேட்போர்டுகள், வெடிபொருட்கள் அல்லது பட்டாசுகள் ஆகியவை அடங்கும்.
மேலும் துப்பாக்கிகள், காந்த பொருட்கள், கதிரியக்க அல்லது அரிக்கும் பொருட்கள், உபகரணங்கள், நகவெட்டிகள், கத்தரிக்கோல், இறைச்சி வெட்டும் உபகரணங்கள் மற்றும் வெடிமருந்துகள் ஆகியவயும் இந்த பட்டியலில் அடங்கும்.
லக்கேஜ்ஜில் எடுத்துச் செல்ல தடைசெய்யப்பட்ட பொருட்கள்:
இவை தவிர கீழ்க்கண்ட ஆபத்து விளைவிக்கும் 14 பொருட்களை எந்த வகை பேக்கேஜ்களிலும் கொண்டு செல்லக்கூடாது என்றும் விமான நிலையம் அறிவித்துள்ளது. அவை,
- ஆக்சிடன்ட்ஸ்
- ஆர்கானிக் பெராக்சைடுகள்
- கதிரியக்க பொருட்கள்
- மின்சார அதிர்ச்சி சாதனங்கள்
- செயலிழக்கும் சாதனங்கள்
- தானியங்கி ஸ்கேட்போர்டுகள்
- திரவ ஆக்சிஜன் சாதனங்கள்
- நச்சு அல்லது உயிரியல் பொருட்கள்
- தீப்பெட்டிகள்
- லைட்டர்கள்
- எரியக்கூடிய திரவங்கள்
- வெடிபொருட்கள் அல்லது பட்டாசுகள்
- துப்பாக்கிகள் மற்றும் போலி ஆயுதங்கள்
- காந்த பொருட்கள் மற்றும் அரிக்கும் பொருட்கள்
எனவே மேலே குறிப்பிட்ட 30 பொருட்களை கொண்டு செல்ல பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றும், அதை மீறி கொண்டு செல்லும் பட்சத்தில் இந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் விமான நிலைய அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவற்றை திரும்ப பெற பயணிகளுக்கு உரிமை இல்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இது பற்றிய விவரங்களுக்கு அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறும் பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.