Last Updated on: 22nd September 2023, 10:52 am
வளைகுடா நாடுகளில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பண மதிப்பில் மிகவும் வலிமையான நாடாக குவைத் திகழ்கிறது. இங்கு உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் குவைத்தில் உள்ள மத்திய புள்ளியியல் துறை நிர்வாகம் ஜூன் 2023 நிலவரப்படி சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு சுவாரஸிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன
குவைத் நாட்டில் வேலைஅதாவது, 174 நாடுகளை சேர்ந்த மக்கள் குவைத் நாட்டில் வேலை செய்து வருவது தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை என எடுத்துக் கொண்டால் 24.3 லட்சம் பேர். இவர்கள் பல்வேறு துறைகளில் வேலை செய்து வருகின்றனர். நடப்பாண்டின் முதல் பாதியில் 86.8 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் குவைத் குடிமக்களும் அடங்குவர்.
இதன்மூலம் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 28.77 லட்சமாக அதிகரித்திருக்கிறது. குவைத்தில் எந்த நாட்டை சேர்ந்த பொதுமக்கள் அதிகமாக இருக்கின்றனர் என்று ஆராய்ந்து பார்த்தால் இந்தியர்கள் தான் முதலிடத்தில் உள்ளனர். மொத்த வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 30.2 சதவீதம் பேர் இந்தியர்கள். 2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் புதிதாக வந்து சேர்ந்த இந்திய தொழிலாளர்கள் மூலம் மொத்த எண்ணிக்கை 8.69 லட்சமாக அதிகரித்துள்ளது.
இந்தியாவிற்கு அடுத்தபடியாக எகிப்து நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. இவர்கள் 4.83 லட்சம் பேர் குவைத் நாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். குவைத் நாட்டின் தொழிலாளர் சமூகத்தில் அதிகப் பங்காற்றும் நபர்களில் அந்நாட்டு மக்கள் 3வது இடத்தில் தான் உள்ளனர். அதாவது, சொந்த நாட்டினரை விட இந்தியர்கள் அதிக அளவில் அங்கு வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 4வது, 5வது இடங்களை எடுத்து கொண்டால் பிலிப்பைன்ஸ், வங்கதேசம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
மாத சம்பளம் எவ்வளவு?பிலிப்பைன்ஸ் மக்கள் 2.69 லட்சம் பேரும், வங்கதேசம் மக்கள் 2.48 லட்சம் பேரும் குவைத் நாட்டில் வேலை செய்து வருகின்றனர். சம்பள விஷயத்திற்கு வருவோம். குவைத் நாட்டு குடிமக்களுக்கு ஒரு மாதத்திற்கு சராசரியாக 1,557 குவைத் தினார்கள் சம்பளமாக கிடைக்கின்றன. இந்திய மதிப்பில் எடுத்துக் கொண்டால் 4,20,000 ரூபாய். குவைத் நாட்டின் அரசு பணிகளில் வேலை செய்வோருக்கு 1,598 தினார்கள் (ரூ.4,32,016) மாத சம்பளமாக கிடைக்கின்றன.
அரசு பணிகளில் ஜாக்பாட்இதுதவிர வெளிநாட்டில் இருந்து வந்து குவைத்தில் வேலை செய்வோரை எடுத்துக் கொண்டால் மாதம் சராசரியாக 343 குவைத் தினார்கள் சம்பளமாக கிடைக்கிறது. இந்திய மதிப்பில் 92,729 ரூபாய். இது தனியார் வேலைகளில் மட்டும் தான். அதுவே வெளிநாட்டில் இருந்து வந்து குவைத்தின் அரசு பணிகளில் வேலை செய்தால் 750 தினார்கள் (ரூ.2,02,761) வரை மாத சம்பளம் கிடைக்கிறது.