Last Updated on: 26th May 2023, 06:45 pm
சியோல்: திடீரென நடுவானில் விமானத்தின் எமர்ஜென்சி கதவைத் திறந்ததால் உள்ளே இருந்த பயணிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர்.
சர்வதேச அளவில் மிகவும் பாதுகாப்பான @@போக்குவரத்து முறையாக விமானங்கள் இருக்கிறது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மிக வேகமாகச் சென்று சேர விமானங்களே ஒரே ஆப்ஷனாக இருக்கிறது.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா ஆண்டுகளைத் தவிர மற்ற ஆண்டுகளில் இது தொடர்ந்து உயர்ந்தே வருகிறது.
விமானங்கள்:அதேபோல சர்வதேச சுற்றுலா என்பதும் இப்போது பரவலாகி வருகிறது. முன்பெல்லாம் மிகப் பெரும் பணக்காரர்களால் மட்டுமே சர்வதேச சுற்றுலா செல்ல முடியும் என்ற சூழல் இருந்தது. ஆனால், இப்போது அந்த நிலை மாறிவிட்டது. விமான டிக்கெட் தொடங்கி அனைத்து விலையும் குறைந்ததால் சர்வதேச சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.அதேநேரம் சில நேரங்களில் விமானங்களில் மிக மோசமான சம்பவங்களும் அரங்கேறியே வருகிறது… சமீப காலங்களாக இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கத் தொடங்கியுள்ளன. அப்படியொரு சம்பவம் தான் தென் கொரியாவில் நடந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தென் கொரியாவில் ஆசியானா ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் தரையிறங்கத் தயாராகி உள்ளது
எமர்ஜென்சி கதவுகள்:சியோலுக்கு தென்கிழக்கே சுமார் 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டேகு சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டு விமானத்தில் ஆசியானா ஏர்லைன்சுக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ321-200 தரையிறங்கத் தயாரானது. அப்போது அந்த விமானத்தில் சுமார் 200 பயணிகள் இருந்தனர்.
அப்போது விமானம் தரையில் இருந்து சுமார் 200 மீட்டர், அதாவது 650 அடி உயரத்தில் இருந்தது. அப்போது எமர்ஜென்சி கதவுக்கு அருகே அமர்ந்திருந்த பயணி ஒருவர் அங்கிருந்த லிவரை எடுத்து யாரும் எதிர்பார்க்காத வகையில் எமர்ஜென்சி கதவைத் திறந்துவிட்டார்.மோசமான பாதிப்பு இல்லை:அந்த உயரத்தில் திடீரென எதிர்பாராதவிதமாகக் கதவு திறக்கப்பட்டதால் சில பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக விமானம் தரையிறங்கிய உடன் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நல்வாய்ப்பாக இதன் காரணமாக யாருக்கும் பெரிய காயங்கள் அல்லது உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
மொத்தம் 9 பேர் இந்தச் சம்பவத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், திடீரென நடுவானில் எமர்ஜென்சி கதவைத் திறந்த அந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல்வாய்ப்பாக அப்போது விமானத்தில் அனைவரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் யாருக்கும் எந்தவொரு மோசமான பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.