Last Updated on: 2nd June 2023, 06:35 am
நல்ல வேளை அந்த நாட்டில் நாம் பிறக்கவில்லை என்று நினைக்கும் அளவுக்கு பல விசித்திர சட்டங்களை கொண்டது வடகொரியா. அந்த நாட்டில் உள்ள பல கொடூரமான மற்றும் வினோதமான சட்டங்களை பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
உலகின் வினோதமான மர்ம நாடு வட கொரியா. அந்த நாட்டில் இருக்கும் பல கடுமையான சட்ட திட்டங்கள் உள்ளது பற்றியும் அவ்வப்போது கொடுக்கப்படும் தண்டனைகள் குறித்தும் செய்திகள் கேள்வி பட்டு வருகிறோம்.
ஆனாலும் அந்த நாட்டு சட்ட திட்டங்கள் பற்றியோ.. மக்களுக்கு என்ன மாதிரியான அடிப்படை உரிமைகள் உள்ளது என்பது பற்றியோ எந்த வித வெளிப்படையான தகவலும் வெளி உலகிற்கு தெரிவது இல்லை.
வட கொரியாவில் சர்வாதிகார ஆட்சி செய்து வரும் கிம் ஜாங் உன் பற்றிக் கூட எந்த ஒரு தகவலும் கசிவது கிடையாது. சிறிய சிறிய குற்றங்களுக்கு கூட வடகொரியாவில் மிகக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவதாக கேள்வி பட்டு இருக்கிறோம்.
ஏன் ஆலோசனைக்கூட்டத்தில் தூங்கிய உயர் அதிகாரிக்கு கூட மரண தண்டனை எல்லாம் விதிக்கப்பட்டு இருக்கின்றன வடகொரியாவில்.. திறந்த வெளி சிறை போல அமைந்து இருக்கும் அந்த நாட்டில் கடைபிடிக்கப்படும் சில விசித்திர சட்டங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
ஆபாச படம் பார்த்தால் மரண தண்டனை: வெளிநாட்டு படங்கள், பாடல்கள் கேட்பதற்கு வடகொரியாவில் அனுமதி கிடையாது. அமெரிக்க படங்களை பார்த்தாலோ ஆபாச படங்கள் பார்த்தாலோ மரண தண்டனை வரை விதிக்கப்படும்.
வடகொரியாவில் மொத்தமே 3 சேனல்கள் தான் உள்ளன.
* வட கொரியாவில் அதிபர் பங்கேற்கும் கூட்டங்களில் தப்பித்தவறி கொட்டாவி விட்டால் அடுத்து சில நிமிடங்களில் மூச்சு கூட இல்லாமல் போய் விடும். ஆம் கடந்த 2015 ஆம் ஆண்டு வடகொரிய பாதுகாப்புத்துறை அமைச்சர், கிம் ஜாங் உன் கூட்டத்தில் தூங்கியதற்காக சுட்டுக்கொல்லப்பட்டார்.
வெளிநாட்டு அழைப்புகள் மேற்கொள்வது அங்கு தண்டனைக்குரிய குற்றம். கடந்த 2007 ஆம் ஆண்டு சர்வதேச அழைப்புகளை மேற்கொண்டதாக பலருக்கும் அங்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறதாம்.
*வட கொரிய அதிபரையோ அவரது குடும்பத்தினரை இழிவாக பேசுவது தேச துரோக குற்றத்திற்கு இணையானதாக கருதப்படும். இத்தகைய குற்றத்தில் ஈடுபட்டால் மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.
* அரசு ஊழியர்கள் அதிலும் ஆண்கள் மட்டுமே கார்கள் ஓட்டுவதற்கு அனுமதி உண்டு. பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி கிடையாது.
* மறைந்த வட கொரிய அதிபர் கிம் இல் சங் இறந்த தினமான 1994 ஜூலை 8 ஆம் தேதி அந்த நாட்டு மக்கள் சிரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அன்றைய தினம் சத்தமாக பேசவோ, மதுபானம் அருந்தவோ தடை உண்டு. இந்த விதியை மீறினால் தொழிலாளர் முகாமில் அடைக்கப்படவோ அல்லது மரண தண்டனை கூட விதிக்கப்படலாம்.
மூன்று தலைமுறையினருக்கு தண்டனை: வட கொரியாவிற்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டு பயணிகள், நாட்டிற்குள் சென்றதும் செல்போன்கள், கேமராக்களை ஒப்படைக்க வேண்டும். சுற்றுலாவை முடித்து விட்டு நாடு திரும்பும் போது மட்டுமே அனுமதி கிடைக்கும். அதேபோல், சுற்றுலாப்பயணிகள் கூடவே பாதுகாவலரும் வருவார். அவர் கூறுவதை கண்டிப்பாக கேட்க வேண்டும்.
* 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அந்த நாட்டை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய தேர்தல் நடைபெறும். ஆனால் வேட்பாளர் ஒருவர் மட்டும் தான் இருப்பார்.
* ஒருவர் தவறு செய்தாலும் அவருடைய குடும்பத்திற்கே தண்டனை விதிக்கப்படும். ஒரு தனிநபர் தவறு செய்தால் அவருடைய மூன்று தலைமுறையினருக்கு தண்டனை உண்டு.
* வடகொரிய மக்கள் சொந்தமாக சொத்துக்களை வைத்துக் கொள்ள அனுமதி கிடையாது. அதற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட காலம் வரை வசிப்பதற்கு அரசே இடத்தை ஒதுக்கி கொடுக்கும்.
* வடகொரியாவில் அனைத்து நாட்களிலும் இரவு கட்டாயம் மின் தடை இருக்குமாம். மின்சாரத்தை பயன்படுத்த அனுமதி பெற வேண்டும். மைக்ரோவேவ் பயன்படுத்துவது சட்ட விரோதம்.