8.9 C
Munich
Friday, September 13, 2024

உலகில் அதிக தற்கொலைகள் பதிவாகும் நாடுகள்: பிரித்தானியா, அமெரிக்காவில் பதற வைக்கும் எண்ணிக்கை;இந்தியாவில்?

உலகில் அதிக தற்கொலைகள் பதிவாகும் நாடுகள்: பிரித்தானியா, அமெரிக்காவில் பதற வைக்கும் எண்ணிக்கை;இந்தியாவில்?

Last Updated on: 4th June 2023, 07:37 am

உலகில் தற்கொலைகள் அதிகம் பதிவாகும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளதில், மிக மோசமான இடத்தில் அமெரிக்கா இருப்பதாக தெரியவந்துள்ளது.

116வது இடத்தில் பிரித்தானியா:

அமெரிக்காவில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருவர் தற்கொலைக்கு இலக்காவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தரவுகள் சேகரிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 31வது இடத்தில் அமெரிக்கா உள்ளது.183 நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் 116வது இடத்தில் பிரித்தானியா உள்ளது. ஏழ்மை நிலையில் உள்ள ஆப்பிரிக்க நாடான லெசோதோ முதலிடம் பிடித்துள்ளது. இங்கு 100,000 மக்களில் தற்கொலை விகிதம் 87.5 என தெரியவந்துள்ளது.

அடுத்த இடத்தில் தென் அமெரிக்க நாடான கயானா உள்ளது. இங்கு தற்கொலை விகிதம் 40.9 என கூறப்படுகிறது. அமெரிக்காவில் தற்கொலை விகிதம் அதிகரிக்க, அதிக அளவு துப்பாக்கி வன்முறை மற்றும் மனநோய் ஆகியவை காரணம் என்று நம்பப்படுகிறது.2021ல் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் அமெரிக்காவில் பதிவான 55 சதவீத தற்கொலைகளுக்கு துப்பாக்கி கலாச்சாரமே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இளையோர்களின் தற்கொலையும் 27 சதவீதம் அமெரிக்காவில் அதிகரித்துள்ளது.பொருளாதார சிக்கல் மற்றும் கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட உளவியல் பாதிப்புகள் முதன்மை காரணமாகவும் கூறுகின்றனர். மேலும், அமெரிக்காவில் தனிமை என்பது பெருவாரியாக பரவும் ஒரு வியாதியாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

116 மில்லியன் மக்கள் சிக்கலில்:

இது நாளுக்கு 15 சிகரெட் புகைப்பதற்கு ஒப்பான பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர் ஒருவர் எச்சரித்துள்ளார். 2021ல் சுமார் 48,200 பேர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

2020ல் இந்த எண்ணிக்கை 46,000 என இருந்துள்ளது. 2019ல் 47,511 என பதிவாகியுள்ளது. உளவியல் பாதிப்பு தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்காத நிலையில் ஆப்பிரிக்க கண்டத்தில் மட்டும் 116 மில்லியன் மக்கள் சிக்கலில் உள்ளதாக கூறுகின்றனர்.

1990ல் இந்த எண்ணிக்கையானது 53 மில்லியன் என்றே இருந்துள்ளது. பிரித்தானியாவை பொறுத்தமட்டில் தற்கொலை விகிதம் 6.9 என்றே பதிவாகியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 700,000 க்கும் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.உலகளாவிய தற்கொலைகளில் 77 சதவீதம் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் நிகழ்கின்றன என்று உலக சுகாதார அமைப்பு மதிப்பிடுகிறது.

இந்தியாவை பொறுத்தமட்டில் தற்கொலை விகிதம் 12.9 எனவும் அதே எண்ணிக்கையுடன் இலங்கையும் உள்ளது என்றே கூறுகின்றனர்.

ஆனால் சுவிட்சர்லாந்து, நேபாளம் மற்றும் பாகிஸ்தானில் தற்கொலை விகிதம் 9.8 என்றே பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here