Last Updated on: 27th May 2023, 11:54 am
நியூயார்க்: 2022-ஆம் ஆண்டின் உலகின் துயரமான நாடுகளின் பட்டியலை பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹன்கே வெளியிட்டிருக்கிறார். இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 103-ஆவது இடம் கிடைத்துள்ளது.
இப்பட்டியல் குறித்து பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே கூறும்போது, “157 நாடுகளில் நிலவும், வேலையின்மை, பணவீக்கம், வங்கிக் கடன், ஜிடிபி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகள்:
ஜிம்பாப்வே
வெனிசுலா
சிரியா
லெபனான்
சூடான்
அர்ஜெண்டினா
ஏமன்
உக்ரைன்
கியூபா
துருக்கி
வேலையின்மை, பணவீக்கம் காரணமாகவே மேற்கூறிய நாடுகள் துயர் நிலையில் இருப்பதாகவும் அவரது பட்டியல் கூறுகிறது.
ஜிம்பாப்வே முதலிடம் ஏன்? –
ஜிம்பாப்வேயில் பணவீக்கம் உச்ச நிலையை தொட்டுள்ளது. மேலும், அதிபர் எம்மர்சனின் கொள்கைகள் மக்களுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது
.இப்பட்டியலில் இந்தியா 103-ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் வேலையின்மைதான் முக்கியப் பிரச்சினையாக இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் பட்டியலில் கடைசி பத்து இடங்களில் மால்டா (148), டோகோ( 149), தாய்லாந்து (150), நைகர் (151), தைவான் (152), மலேசியா (153), ஜப்பான் (154), அயர்லாந்து (155), குவைத் (156), ஸ்விட்சர்லாந்து (157) ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்நாடுகளில் வேலையின்மை மற்றும் பணவீக்கம் குறைந்த சதவீதத்தில் பதிவாகி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.