Last Updated on: 13th April 2023, 02:39 pm
குவைத்தில் இஸ்லாமியர்களின் இனிய திருநாளான ஈத் அல் ஃபித்ர் பண்டிகையை முன்னிட்டு பொதுத்துறை ஊழியர்களுக்கு 5 நாள் விடுமுறை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, எதிர்வரும் ஏப்ரல் 21 முதல் 25 வரை ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
அடுத்து அதிகாரப்பூர்வ வேலை நாள் ஏப்ரல் 26 அன்று மீண்டும் தொடங்கும் என்று குவைத் செய்தி நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ஈத் அல் ஃபித்ரானது ஏப்ரல் 21 அன்று இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
புனித மாதமான ஷவ்வால் முதல் நாளில் கொண்டாடப்படும் ஈத் அல் ஃபித்ர் பண்டிகை, ஹிஜ்ரி நாட்காட்டியில் ரமலானைத் தொடர்ந்து வரும். இது ஐக்கிய அரபு அமீரகத்தில் 2023 இன் முதல் நீண்ட வார இறுதியைக் குறிக்கும் என கூறப்பட்டுள்ளது.
அமீரகத்தில் இந்த விடுமுறை நாட்களானது ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 23 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் 23 ஆம் தேதி அமீரகத்தில் புனித ரமலான் மாதம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.