Last Updated on: 8th July 2023, 04:27 pm
இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு தொடங்கி 6 மாதங்கள் முடிந்துவிட்டது. இந்த ஆறு மாதங்களில் நாம் சாம்சங் கேலக்சி S23 சீரிஸ், ஒன்பிளஸ் 11 சீரிஸ் என பல புதிய 5G ஸ்மார்ட்போன்களை பார்த்துவிட்டோம். இந்த ஆண்டு பிற்பகுதியிலும் இதேபோன்ற புது வரவுகள் வரவிருக்கின்றன. அதில் Apple, Google, Nothing போன்ற நிறுவனங்களின் தலைசிறந்த பிளாக்ஷிப் 5G போன்களும் அடங்கும்.
Nothing Phone 2
ஜூலை மாதம் 11 அன்று வெளியாகவிருக்கும் Nothing Phone 2 ஒரு அதிநவீன 5G போன் ஆகும். இதில் Qualcomm Snapdragon 8+gen 1 சிப் வசதி, 6.7 இன்ச் AMOLED ஸ்க்ரீன், 4700mAh பேட்டரி வசதி, புதிய லைட் மற்றும் சவுண்ட் சிஸ்டம், புதிய கேமரா வசதிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஸ்மார்ட்போனில் சார்ஜ்ர் உடன் வராது. தனியாக நாம் சார்ஜ்ர் வாங்கவேண்டும். இதற்கு Nothing நிறுவனம் 3 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் நான்கு ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட் தருகிறது. இதனால் இதை வாங்கும் வாடிக்கையாளர்கள் பல காலம் பயன்படுத்தமுடியும். இதை 40 முதல் 45 ஆயிரம் ரூபாய் விலையில் எதிர்பார்க்கலாம்.
Apple iphone 15 சீரிஸ்
இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கக்கூடிய ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகிறது. இதில் இதுவரை இல்லாத புதிய பஞ்ச் ஹோல் டிஸ்பிளே டிசைன், புதிய Action Button, சிறிய பெசல் உள்ள ஸ்க்ரீன், முதல் முறையாக ஆப்பிள் லைட்னிங் போர்ட் பதிலாக USB type-c சார்ஜ்ர் வசதி இடம்பெறும்.
மேலும் புதிய Apple Bionic A16 சிப் வசதி இடம்பெறும். இதன் Pro மற்றும் Pro Max மாடல்கள் Bionic chip A17 கொண்டிருக்கும். இதன் விலை தற்போது விற்பனையாகும் ஆப்பிள் போன்களை விட குறைந்தது 15 ஆயிரம் ரூபாய் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேமரா வசதிகளாக இதில் 48MP முக்கிய கேமரா அனைத்து மாடல்களிலும் இடம்பெறும். இதன் பேட்டரி மற்றும் சார்ஜ்ர் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
Oneplus Nord 3
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை நோர்ட் போன் இந்த ஆண்டு வெளியாகிறது. இதில் 1.5k resolution உள்ள 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளே, 120HZ refresh rate, Mediatek Dimensity 9000 SoC சிப், 50MP முக்கிய கேமரா, 8 MPமற்றும் 2MP சிறிய கேமரா, முன்பக்கம் 16MP செல்பி கேமரா உள்ளது.
இதிலும் Android 13 OS இடம்பெறும். இதற்கு 80W வரை பாஸ்ட் சார்ஜிங் வசதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சார்ஜ்ர் தனியாக வாங்கவேண்டும். இதன் விலை 30 ஆயிரம் ரூபாயில் இருக்கும்.
Samsung galaxy Z Fold 5
சாம்சங் நிறுவனத்தின் Galaxy Z Fold 5 ஸ்மார்ட்போன் வரும் ஜூலை 27 அன்று வெளியாகிறது. இதில் Qualcomm Snapdragon 8 Gen 2 சிப் வசதி, பின்பக்கம் 6.2 இன்ச் HD+ AMOLED டிஸ்பிளே, முக்கிய டிஸ்பிளே வசதியாக 7.6 இன்ச் QXGA AMOLED டிஸ்பிளே வசதி, 120HZ refresh rate உள்ளது.
இதில் அண்டர் டிஸ்பிளே செல்பி கேமரா வசதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் செல்பி கேமரா 4MP சென்சார் வசதியும், முக்கிய வெளிப்புற கேமரா 10MP கேமரா வசதி கொண்டிருக்கும். இந்த போன் நிச்சயம் Samsung Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனின் 1,54,999 லட்சம் ரூபாய் விலைக்கு மேலாக வெளியாகும்.
Google Pixel 8 சீரிஸ்
இந்த போன் வரும் அக்டோபர் 2023 மாதம் வெளியாகவுள்ளது. இந்த போனில் அடுத்த ஜெனரேஷன் Tensor G3 SoC சிப் இடம்பெறும். இதன் பேஸ் மாடல் டூயல் கேமரா வசதியும், Pro மாடல் 3 கேமரா சென்சார் வசதி வைத்திருக்கும்.இதில் 50MP Samsung GN2 ISOCELL, மேம்படுத்தப்பட்ட Sony IMX 787 அல்ட்ரா வைட் கேமரா, 48MP Samsung GM5 கேமரா இருக்கும். முன்பக்கம் செல்பி கேமரா வசதியாக 11 MP கேமரா உள்ளது.