Last Updated on: 14th August 2023, 05:13 pm
ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வதே உடலில் பாதி நோய்களைத் தடுக்கவும் நோயெதிர்ப்பு ஆற்றலை வலுவாக வைத்திருக்கவும் உணவு எவ்வளவு முக்கியம் என்பது நமக்குத் தெரியும். அதேபோல நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும் உணவுகளை நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. குறிப்பாக வைரஸ் காய்ச்சல் உள்ள சமயத்தில் சில உணவுகளை எடுப்பது குமட்டல், வாந்தி ஆகியவற்றை அதிகரிக்கச் செய்வதோடு காய்ச்சலை சரியகவும் நீண்ட நாட்கள் பிடிக்கும். அதனால் கீழுள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
சாப்பிடக் கூடாத உணவுகள்
வைரஸ் காய்ச்சல் இருக்கும்போதோ அல்லது அதன் அறிகுறிகள் தென்படும்போதோ கீழ்வரும் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
அதிக நார்ச்சத்துக்கள் கொண்ட உணவுகள் செரிமானம் அடைவதற்கு நேரம் எடுக்கும். அதனால் முழு தானியங்கள், அவற்றால் செய்யப்பட்ட பொருள்களை காய்ச்சல் நேரத்தில் தவிர்ப்பது நல்லது.
முழு பருப்பு வகைகள், சுண்டல் வகைகள் ஆகியவற்றைத் தவிர்த்திடுங்கள்.
லெட்யூஸ், முட்டைகோஸ், டர்னிப், முள்ளங்கி, வெங்காயம் போன்ற காய்கறிகளை காய்ச்சல் சமயத்தில் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக பச்சை காய்கறிகளை தவிர்ப்பது சிறந்தது.
அதிக கொழுப்புள்ள உணவுகள், எணணெயில் பொரித்த சமோசா பக்கோடா உள்ளிட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை சேர்த்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
ரசாயனங்கள், பதப்படுத்திகள் சேர்க்கப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. குறிப்பாக ஊறுகாய், கெட்சப், மயோனைஸ் போன்றவற்றைத் தொடவே கூடாது.
வைரஸ் காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய உணவுகள்
நிறைய திரவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.
பழச்சாறுகள், சூப் வகைகள் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம். (ரெடிமேட் சூப்களை எடுக்கக் கூடாது).
பால் மற்றும் பால் பொருள்களை மிதமான அளவில் எடுத்துக் கொள்ளலாம்.
தேனில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிகம் என்பதால் மிதமான அளவில் மூலிகை டீ ஆகியவற்றுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
முட்டை, மீன், சீஸ் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
வைரஸ் காய்ச்சல் வேகமாக சரியாக
வைரஸ் தொற்று மற்றும் விரைவில் சரியாக வேண்டுமென்றால் மென்மையாக உள்ள உணவுகள், எளிதாக ஜீரணமடையக்கூடிய உணவுகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
Your article helped me a lot, is there any more related content? Thanks! https://accounts.binance.com/ur/register-person?ref=WTOZ531Y