Last Updated on: 16th August 2023, 12:34 pm
குறிப்பாக வெள்ளை நிற உணவுகள் என்றாலே அவை கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளாகத் தான் இருக்கும் என்று ஒதுக்கிவிடுகிறோம். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் பல வெள்ளை நிறத்தில் இருப்பது உண்மை தான். ஆனால் கார்போஹைட்ரேட் இல்லாத ஆரோக்கியமான வெள்ளை நிற உணவுகள் பல இருக்கின்றன. அவை என்னென்ன, அவற்றில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க…
யோகர்ட்
யோகர்ட்டில் ப்ரோ – பயோடிக் பண்புகள் அதிகமாக .இருக்கின்றன. இதை எடுத்துக் கொள்ளும்போது குடலில் நல்ல பாக்டீரியாக்கள் உற்பத்தி அதிகரித்து ஜீரண ஆற்றலை மேம்படுத்தும்.
இதில் கால்சியம் மிக அதிகம். இது எலும்புகளை வலிமையாக்கும். அதேபோல இதிலுள்ள புரதச்சத்து தசையின் வளர்ச்சியை அதிகரிக்கக் கூடியது.
காலிஃபிளவர்
காலிஃபிளவரில் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் ஆகஜயவை நிறைந்திருக்கின்றன. இதில் நார்ச்சத்துக்களும் அதிகமாக இருக்கின்றன.
எலும்பு ஆரோக்கியம் முதல் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பாதுகாப்பது, நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது என பல நன்மைகளைக் கொண்ட இந்த காலிஃபிளவரில் கோலின் சத்தும் அதிகமாக இருக்கிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உடல் எடையைக் குறைக்கவும் காலிஃபிளவர் மிக உதவியாக இருக்கும்.
பனீர்
பனீரில் கால்சியமும் புரதங்களும் அதிகமாக நிறைந்திருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். அதுமட்டுமின்றி பனீரில் வைட்டமின் பி12 அதிக அளவில் இருக்கிறது.
இந்த வைட்டமின் பி12 மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்கவும் உதவி செய்கிறது.
கொண்டைக்கடலை
வெள்ளை நிற கொண்டைக்கடலையில் புரதச்சத்துக்கள் அதிகம். ஜீரண ஆற்றலை மேம்படுத்தும் தன்மை கொண்டிருக்கிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் ரத்த நாளங்களை ஊக்குவிப்பதோடு ரத்தம் உறைதலைத் தடுக்கும்.
இதிலுள்ள நார்ச்சத்துக்கள் செரிமான ஆற்றலை மேம்படுத்துவதோடு உடல் எடையைக் குறைக்கவும் உதவி செய்யும். தசை வளர்ச்சியையும் மேம்படுத்தும்.
பூண்டு
பூண்டு வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், மக்னீசியம், செலீனியம், ஜிங்க், மாங்கனீசு உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றோடு இதிலுள்ள அல்லிசின் என்னும் பண்பு புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது.
ரத்தக் குழாய்களில் தேங்கும் கெட்ட கொலஸ்டிராலை எரித்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் தன்மை பூண்டுக்கு உண்டு.
வெங்காயம்
வெள்ளை நிற வெங்காயத்தில் நிறைய மருத்துவப் பயன்கள் இருக்கின்றன. குறிப்பாக வெங்காயத்தில் உள்ள சல்பர், க்ரோமியம் போன்ற மினரல்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்கிறது.
நீரிழிவு நோயாளிகள் தினமும் தங்களுடைய உணவில் கட்டாயம் வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது டைப் 2 நீரிழிவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.
காளான்
காளான் வெள்ளை நிறத்திலுள்ள மிக முக்கியமான உணவு. இதை நாம் பெரும்பாலும் எடுத்துக் கொள்வதே இல்லை. ஆனால் காளானில் ஏராளமான மருத்துவப் பயன்கள் நிறைந்திருக்கின்றன.
வாத நோய்களால் ஏற்படும் பக்க விளைவுகளையும் அறிகுறிகளையும் சரிசெய்வதில் காளானுக்கு முக்கிய இடமுண்டு. அதேபோல ஆண், பெண் இருவருக்குமே இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் காளானுக்கு முக்கியப் பங்கு உண்டு.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.