8.9 C
Munich
Friday, September 13, 2024

முளைகட்டிய உணவுகளை பச்சையாக சாப்பிடுவது நல்லதா, கெட்டதா? எப்படி சாப்பிடுவது?

முளைகட்டிய உணவுகளை பச்சையாக சாப்பிடுவது நல்லதா, கெட்டதா? எப்படி சாப்பிடுவது?

Last Updated on: 9th July 2023, 11:53 am

ஊட்டச்சத்து மிகுந்த இயற்கையான உணவுகளில் முளைகட்டிய உணவுகள் அற்புதமானவை. இதில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. செரிமானம் மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மேம்படுத்துவதாகவும், இதய நோய்களில் இருந்து பாதுகாக்கவும் செய்கிறது. எனினும் இவை முழுமையான ஆரோக்கியம் அளிக்கிறதா, ஏதேனும் பாதிப்புகளை அளிக்கிறதா என்பது குறித்தும் அறிய வேண்டும். முளைகட்டிய உணவுகளை அப்படியெ எடுத்துகொள்வது உங்களுக்கு என்ன மாதிரியான நன்மைகளை அளிக்கிறது, பக்கவிளைவுகள் ஏதேனும் உண்டா என்பதுபற்றி இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

​முளைகட்டிய உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?​

முளைகட்டிய உணவுகள் சத்தானவை. இதில் குறைந்த கலோரிகள் உள்ளன. இது தாவர கலவைகளின் வளமான மூலமாகும். இது வைட்டமின் மற்றும் தாது உள்ளடக்கம் அடிப்படையில் மாறுபடும். முளைக்கும் செயல்முறை இந்த உணவுகளின் ஊட்டச்சத்து அளவை அதிகரிக்கிறது.

முளைக்காத தாவரங்களை விட முளைகளில் புரதம், ஃபோலேட், மெக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு மற்றும் வைட்டமின்கள் சி மற்றும் வைட்டமின் கே போன்றவை உள்ளன. முளைகட்டுவதால் புரதம் அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் அதிக அளவு அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் உள்ள புரதங்கள் ஜீரணிக்க எளிதாக இருக்கும். இது ஆண்டி நியூட்ரியன்ர்களின் அளவை குறைப்பதாக தோன்றுகிறது.

முளைகட்டிய உணவுகள் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற நன்மை பயக்கும் தாவர சேர்மங்களின் சிறந்த ஆதாரங்கள்.

​முளைகட்டிய உணவுகள் அளிக்கும் நன்மைகள் என்ன?​

அதிக சத்தானது. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த செய்கிறது. சர்க்கரைகளை உடைத்து ஜீரணிக்க உடல் பயன்படுத்தும் அமிலேஸ் செயல்பாட்டை சீராக்க முளைகள் உதவுவதாக ஆய்வு கூறுகிறது.

செரிமானத்தை மேம்படுத்த உதவும். இதில் உள்ள நார்ச்சத்து அதிகரிப்பதே இதற்கு காரணம். முளைக்காத தானியங்களை விட 133% அதிக நார்ச்சத்து இருப்பதாக ஆய்வு காட்டுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் இவை கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை மேம்படுத்தலாம்.

இப்படி எண்ணற்ற ஊட்டச்சத்துக்களை கொண்டிருந்தாலும் பச்சையாக எடுப்பது உடலுக்கும் ஆரோக்கியத்துக்கும் ஆபத்தானது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. முளைகளை பச்சையாக சாப்பிடுவது என்ன மாதிரியான பாதிப்புகளை உண்டு செய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.

​முளைகட்டிய உணவுகளில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா இருக்குமா?​

தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இந்த மூல முளைகளில் இருக்கலாம். முளைகள் சூடான மற்றும் ஈரப்பதமான காலநிலையில் மட்டுமே வளரும். இதில் பாக்டீரியாக்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். இவை உடல் ஆரோக்கியத்தை பதம் பார்க்க செய்யலாம் என்பதால் இதை தொடர்ந்து எடுப்பது ஆபத்தானது.

​முளைகட்டிய உணவு பச்சையாக எடுப்பது விஷத்தன்மை கொண்டதா?​

முளைகட்டிய உணவுகளில் பாக்டீரியா வளர்ச்சி இருப்பது உணவில் விஷத்தை உண்டு செய்கிறது. விஷ அபாயம் உள்ள முளைகட்டிய உணவுகளை தினசரி உணவில் சேர்த்துகொண்டால் இவை நாளடைவில் வயிற்றை சீர்குலைத்து உங்கள் குடல் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும். மேலும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை உடலில் தேக்கவும் செய்கின்றன.

முளைகட்டிய உணவுகள் அப்படியே சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறதா?

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தவும் செய்யும் என்பது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இது ஏற்றுக்கொள்ள கூடியதே. அதனால் தான் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் முளைகட்டிய உணவுகளை எடுத்துகொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சமயங்களில் இவை உயிருக்கு ஆபத்தை கூட உண்டு செய்துவிடலாம். ஏனெனில் இது மாசுபடுவதால் உடலை பலவீனமாக்கி நோய்களுக்கு ஆளாக்கும். அதனால் இதை சமைத்து எடுக்க வேண்டி வலியுறுத்துகிறார்கள்.

​முளைகட்டிய உணவுகள் சாப்பிடுவதால் நோய்களை உண்டு செய்யுமா?​

தினசரி அடிப்படையில் இதை எடுத்துகொள்வது ஆபத்தானது. இது சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு, முடக்கு வாதம் மற்றும் உயிரிழப்பு வரை கடுமையான உடல்நல பிரச்சனைகளை தூண்டும். ஆனால் இதை சமைத்து எடுப்பதன் மூலம் நன்மைகளை அப்படியே பெறலாம்.

​முளைகட்டிய உணவுகள் எப்படி ஆபத்தில்லாமல் சேர்ப்பது?​

முளைகட்டிய உணவுகள் இயன்றவரை வீட்டில் ஆரோக்கியமான முறையில் செய்யுங்கள்.
தானியங்கள் முதல் பருப்பு வகைகள் முதல் கொட்டைகள் வரை பலவற்றையும் முளைக்க வைத்து எடுக்கலாம்.

கடைகளில் வாங்கும் போது குளிரூட்டப்பட்ட முளைகட்டிய உணவுகளை வாங்குங்கள். இது பாக்டீரியாக்களை உருவாக்கும் அபாயம் குறைவு.
முளைகட்டிய உணவு கடைகளில் வாங்குவதாக இருந்தால் மெல்லியதாக இருக்கட்டும்,. துர்நாற்றம் போன்ற வாடை இருந்தால் தவிருங்கள்.

சுகாதாரமான முறையில் வீட்டில் தயாரித்த முளைகட்டிய உணவுகளை வாரம் ஒரு முறை சிறிய அளவில் எடுக்கலாம். சுவையான முறையில் ரெசிபியாக சேர்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here