9.1 C
Munich
Thursday, September 12, 2024

எவ்வளவு சளி, மூக்கு ஒழுகினாலும் சுக்கு காபி இப்படி செஞ்சு குடிங்க… 3 விதமான சுக்குமல்லி காபி ரெசிபி உங்களுக்காக…

Must read

Last Updated on: 17th July 2023, 07:05 pm

சுக்கு, மல்லி, திப்பிலி. மிளகு போன்ற மூலிகைகள் நோய்த் தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதோடு மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களையும் சரிசெய்யும். நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்தும்.​சளி, இருமலுக்கு இதமான சுக்கு, மல்லி காபி​சளி, இருமலுக்கு இதமான சுக்கு, மல்லி காபிதேவையான பொருட்கள் :சுக்கு – 1 கப்மல்லி – 1 கப்மிளகு – 1 டீஸ்பூன்சீரகம் – 1 டீஸ்பூன்சுக்கு காபி செய்ய :தண்ணீர் – 2 கப்சுக்கு காபி பொடி – 2 டீஸ்பூன்பனங்கற்கண்டு – தேவையான அளவு.

செய்முறை :முதலில் சுக்கு, கொத்தமல்லி, சீரகம், மிளகு ஆகிய நான்கையும் வாணலியில் போட்டு எண்ணெய் எதுவும் சேர்க்காமல் வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். கருகவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.சுக்கை அப்படியே சேர்த்தாவ் வறுபடாது. அதனால் ஒன்றிரண்டாக தட்டி வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.இவை எல்லாவற்றையும் நன்கு ஆறவிட்டு மிக்ஸியில் நன்கு அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள்.பொடியை சிறிது நேரம் ஆறவிட்டு பின் ஒரு காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.​

சுக்குமல்லி காபி செய்வது எப்படி?

​சுக்குமல்லி காபி செய்வது எப்படி?

ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி இரண்டு ஸ்பூன் அரைத்து வைத்திருக்கும் பொடியைச் சேர்த்துக் கொதிக்க விடுங்கள்.நன்கு கொதித்ததும் அதில் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து சூடாகக் குடித்தால் சளி, காய்ச்சல் பறந்து போய்விடும். பெரியவர்கள் இனிப்பு சேர்க்காமலே கூட குடிக்கலாம்.​

மூலிகை சுக்கு காபி செய்வது எப்படி ?

தேவையான பொருள்கள்சுக்கு – 1 இன்ச் அளவுமல்லி – 1 ஸ்பூன்மிளகு – 5சீரகம் – கால் ஸ்பூன்சோம்பு – கால் ஸ்பூன்துளசி இலைகள் – 10வெற்றிலை – 1எலுமிச்சை பழம் – அரைநாட்டு சர்க்கரை – 1 ஸ்பூன்

செய்முறை

சுக்கு, மல்லி, மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.அடுப்பில் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.அதில் கொரகொரப்பாக அரைத்து வைத்திருக்கும் பொடியைச் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.அதிலேயே துளசி இலை மற்றும் வெற்றிலையை கிள்ளிப் போட்டு சேர்த்துக் கொதிக்க விடுங்கள்.நன்கு கொதித்து தண்ணீர் ாதியாகச சுண்டும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு அதை வடிகட்டி சிறிது நேரம் ஆறவிட்டு குடிக்கும் சூட்டுக்கு வநததும் அதில் எலுமிச்சை சாறு மற்றும் நாட்டுச் சர்க்கரை கலந்து குடிக்கலாம்.இதை காலை, மாலை இரண்டு வேளையும் குடித்து வர எப்பேர்ப்ட்ட சளியும் கரைந்து வெளியேறும்.​

காய்சலை விரட்டும் மூலிகை சுக்குமல்லி கஷாயம்

தேவையான பொருள்கள்கொத்தமல்லி விதை – 2 ஸ;பூன்சுக்கு பொடி – அரை ஸ்பூன்ஏலக்காய் – 2மிளகு – 4திப்பிலி – 2சித்தரத்தை பொடி – 1 சிட்டிகைஅஸ்வகந்தா பொடி – 1 சிட்டிகைஅதிமதுரம் பொடி – 1 சிட்டிகைதுளசி – 10 இலைகள்

செய்முறை

கொத்தமல்லி, சுக்கு, ஏலக்காய், மிளகு, திப்பிலி ஆகியவற்றை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.வறுத்தது நன்கு ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரைச் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.கொதித்த பிறகு அரைத்து வைத்திருக்கும் பொடியைச் சேர்த்து அதோடு சித்தரத்தை, அதிமதுரம், அஸ்வகந்தா மற்றும் துளசி இலைகளையும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.நன்கு கொதித்து ஓரளவு சுண்டியதும் (முக்கால் லிட்டர் அளவு) அதை வடிகட்டி வெதுவெதுப்பான நிலையில் குடித்து வந்தால் மழைக்காலத்தில் ஏற்படும் தொற்றுக்கள், சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை உங்கள் பக்கமே நெருங்காது.

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article