Last Updated on: 8th July 2023, 12:15 pm
அசைவ உணவுகள் என்றாலே பெரும்பாலானோர் வெறும் இறைச்சியை மட்டுமே சாப்பிடுவார்கள். ஆனால் வெறும் இறைச்சியை விட விலங்குகளின் உள்ளுறுப்புகளில் தான் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்றும் அதிலும் குறிப்பாக ஈரல் வகைகளில் என்ன மாதிரியான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அவற்றை எந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம் என்பவை குறித்துதெரிஞ்சிக்கலாம் வாங்க…
ஈரல் ன்றாலே பொதுவாக ஆட்டின் ஈரலை தான் பெரும்பாலானோர் சாப்பிடுகிறார்கள். அதிலுள்ள ஊட்டச்சத்துக்களை போலவே தான் மாடு மற்றும் பிற விலங்குகளின் ஈரல்களிலும் இருக்கின்றன. ஆட்டு ஈரல் அதிகம் பேரால் சாப்பிடப்படுகிறது என்பதால் அதை முதன்மையாக வைத்தே இங்கே ஊட்டச்சத்து விவரங்களை நாம் பார்க்கலாம்.
ஈரலின் கலோரி அளவுகள்
பொதுவாக இறைச்சியை விட ஈரலில் கொழுப்பு அதிகம். அதனால் கலோரிகளும் அதிகமாக இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் ஈரலில் கலோரி அளவுகள் குறைவு தான்.100 கிராம் அளவு சமைத்த ஈரலில் வெறும் 150 கலோரிகள் மட்டும் தான் இருக்கின்றதாம்.
ஈரலின் ஊட்டச்சத்து மதிப்புகள்
நீங்கள் யோசித்து பார்க்க முடியாத அளவுக்கு மிக அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.புரதச்சத்துக்கள்,வைட்டமின் ஏ,வைட்டமின் பி12,செலீனியம்,இரும்புச்சத்து,அமினோ அமிலங்கள்,காப்பர்,100 கிராமில் 20 கிராம் அளவு புரதங்களும் 5 கிராம் கொழுப்பும் கிடைக்கும்.ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
தசை வளர்ச்சியை மேம்டுத்த
உடலில் உள்ள தேவையில்லாத கெட்ட கொழுப்புகளுக்கு குறைத்து தசை வளர்ச்சியை மேம்படுத்த உதவி செய்யும்.
அதோடு தசையின் வளர்ச்சியை மேம்படுத்தக்கூடிய அமினோ அமிலங்கள் (சிஸ்டின், லூசின், மித்தோலின்) ஆகியவை அதிக அளவில் நிறைந்திருக்கின்றன. அதனால் அதிக உடற்பயிற்சிகள் செய்பவர்களுக்கு மிக நல்லது.
தினமும் ஈரல் சாப்பிடலாமா?
நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அதேசமயம் கலோரிகளும் குறைவு தான். அதனால் தினமும் ஈரல் சாப்பிடலாமா என்கிற கேள்வி நமக்கு வரும். ஆனால் ஈரல் தினமும் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏன் தெரியுமா?
இதில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் மிக அதிக அளவில் இருக்கின்றன. அதனால் தினமும் சாப்பிட்டால் வைட்டமின்கள் அளவு உடலில் அளவுக்கு அதிகமாகி அதுவே வைட்டமின் டாக்ஸிட்டியை ஏற்படுத்தும் (vitamin toxicity).
வைட்டமின் பி12 ஈரலில் நம்முடைய தினசரி தேவையில் 37 மடங்கு அதிகமாக இருக்கிறதாம்.
வைட்டமின் ஏ தினசரி தேவையை விட 8 மடங்கு அதிகமாக இருக்கிறது.
காப்பர் தினசரி தேவையைக் காட்டிலும் 7 மடங்கு அதிகம்.
செலீனியம் தினசரி தேவையை விட 1.5 மடங்கு அதிகமாக இருக்கிறது
எப்படி சாப்பிட வேண்டும்?
ஊட்டச்சத்துக்கள் குறிப்பாக வைட்டமின்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதால் தினமும் சாப்பிடுவதையோ அடிக்கடி சாப்பிடுவதையோ தவிர்த்துவிட்டு வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் ஈரலை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.