இரவு தொப்புளில் 2 சொட்டு எண்ணெய் விட்டுட்டு படுங்க… இந்த 6 பிரச்சினையும் சரியாயிடும்…

உச்சந்தலை தொடங்கி, கால் பாதம் வரையிலும் உடலுக்கு எண்ணெய் தேய்க்கும் பழக்கம் நம்முடைய பாரம்பரிய முறைகளில் முக்கியமானது. சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இது முக்கியமான தெரபியாக சொல்லப்படுகிறது. எண்ணெய் குளியலால் உடலில் நிறைய ஆரோக்கிய மாற்றங்கள் ஏற்படும். அதேபோல தான் தினமும் இரவு தூங்கும்போது தொப்புளில் எண்ணெய் வைத்துக் கொண்டு படுக்கும்போதும் நடக்கும்.

​தொப்புளை சுத்தமாக்கும்

நம்முடைய உடலில் எல்லா பாகங்களையும் சுத்தம் செய்வோம். ஆனால் குளிக்கும் போது தொப்புளை கண்டுகொள்ளவே மாட்டோம்.ஆனால் இரவில் தொப்புளில் எண்ணெய் வைத்துக் கொண்டு தூங்கும்போது தொப்புள் இயற்கையாக அதிலுள்ள அழுகு்குகள் ஆகியவற்றை வெளியேற்றி சுத்தமாக்கும். அதோடு தொப்புள் பகுதியில் தொற்றுக்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.​

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை

வயிறு மந்தமாக இருப்பது, தீராத வயிற்று வலி ஆகிய பிரச்சினை இருப்பவர்கள் தினமும் இரவு தூங்கச் செல்லும்முன் தொப்புளில் 2 சொட்டு எண்ணெய் வைத்துக் கொண்டு தூங்கினால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை குறையும்.குறிப்பாக அஜீரணக் கோளாறு, டயேரியா, ஃபுட் பாய்சன் ஆகியவற்றை சரிசெய்ய சிறந்த தீர்வாக இருக்கும்.​

மாதவிடாய் வலி குறைய

பெண்களுக்கு தொப்புளில் எண்ணெய் விட்டுக் கொண்டு தூங்குவது நிறைய நன்மைகளைத் தரும்.மாதவிடாய் காலங்களில் பெரும்பாலான பெண்கள் தீவிரமான வலியை அனுபவிப்பார்கள். அவர்கள் அந்த சமயங்களில் தொப்புளில் எண்ணெய் விட்டு தூங்குவது வலியைக் குறைத்து இதமளிக்கும்.​

கருவளம் அதிகரிக்கும்

ஆண், பெண் இருவருமே தூங்கச் செல்லும்முன் தொப்புளில் எண்ணெய் வைக்கலாம். இது உடலின் அதிகப்படியான சூட்டைக் குறைத்து ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்த உதவி செய்யும்.ஆண், பெண் இருவருக்குமே கருவளம் அதிகரிக்கும். அதனால் குழந்தைக்காக முயற்சி செய்பவர்கள் மற்ற விஷயங்களோடு சேர்த்து இதையும் செய்ங்க… வேகமாக பலன் கிடைக்கும்.

​மூட்டு வலி குறையும்

வயதாகும்போது எலும்புகளில் தேய்மானம் ஏற்பட்டு மூட்டு வலி உண்டாகும். இந்த மூட்டுவலியை சரிசெய்ய கால் மூட்டுகளில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வோம். ஆனால் தொப்புளில் எண்ணெய் விட்டுக் கொண்டு படுத்தாலும் மூட்டு வலி குறைந்து எலும்புகள் வலுவாக இருக்கும்.

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times