21.9 C
Munich
Saturday, September 7, 2024

அனீமியா இருக்கா? இந்த 3 உணவுகளை தினம் சாப்பிடுங்க… ஹீமோகுளோபின் கடகடனு அதிகமாகும்…

Must read

Last Updated on: 20th July 2023, 01:34 pm

உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியதும் அந்த ரத்தத்தில் உடல் முழுக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்லக்கூடிய ஹீமோகுளோபின் சரியான அளவில் இருக்க வேண்டியதும் மிக முக்கியம். இதில் குறைபாடு ஏற்படும்போது தான் ரத்தசோகை உண்டாகிறது. இந்த ரத்தசோகை உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்குக் காரணமாக அமைகின்றன. இதற்காக சபளிமெண்ட்டுகள் எடுத்துக் கொண்டாலும் உணவின மூலம் சமன் செய்வதுதான் ஆரோக்கியமான வழிமுறையாக இருக்கும்.

​ஹீமோகுளோபினும் அனீமியா அறிகுறிகளும்

நம்முடைய ரத்த சிவப்பணுக்களில் இருக்கும் ஒருவகை புரதம்தான் இந்த ஹீமோகுளோபின். ரத்தத்தில் உள்ள இந்த ஹீமோகுளோபின்களின் மூலம் தான் உடல் முழுக்க ஆக்சிஜன் கடத்தப்படுகிறது. அதனால் ஹீமோகுளோபின் அளவை சீராகப் பராமரிக்க வேண்டியது அவசியம்.உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதால் இந்த ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. இது குறையும்போது தலைசுற்றல், தலைவலி, மார்பு பகுதியில் அழுத்தம் மற்றும் வலி, மூச்சுத் திணறல் போன்ற பல அறிகுறிகள் தோன்றும். இதை சரிசெய்ய கீழ்வரும் உணவுகளை தினசரி டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

​ஹீமோகுளோபினை அதிகரிக்கும் நெல்லிக்காய் ஜூஸ்​ஹீமோகுளோபினை அதிகரிக்கும் நெல்லிக்காய் ஜூஸ்தேவையான பொருள்கள்நெல்லிக்காய் – 2,கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி,தண்ணீர் – அரை லிட்டர்,சீரகம் – 1 சிட்டிகை,முருங்கை பொடி – கால் ஸ்பூன்,கல் உப்பு – கால் ஸ்பூன்,

செய்முறை

நெல்லிக்காயை விதையை நீக்கிவிட்டு பொடிப் பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.அதோடு கொத்தமல்லி இலைகளையும் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.நெல்லிக்காய், கொத்தமல்லி, சீரகம் ஆகிய மூன்றையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் மட்டும் சேர்த்து நன்கு அரைத்து அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.இதோடு மீதமுள்ள தண்ணீரையும் சேர்த்து அதில் உப்பு மற்றும் முருங்கை இலை பொடியையும் சேர்த்து கலந்தால் சுவையான நெல்லிக்காய் ஜூஸ் ரெடி!ரத்த சோகை பிரச்சினை உள்ளவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை குடித்து வந்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.​

இளநீர் – சாலியா விதை – சப்ஜா பானம்

​இளநீர் - சாலியா விதை - சப்ஜா பானம்

தேவையான பொருள்கள்

இளநீர் – 1 டம்ளர்,
சாலியா விதை – அரை ஸ்பூன்,
சப்ஜா விதை – கால் ஸ்பூன்,

செய்முறை

சாலியா விதை மற்றும் சப்ஜா விதை ஆகிய இரண்டையும் தனித்தனியே தண்ணீரில் போட்டு ஒரு மணி நேரம் வரை ஊறவிடுங்கள்.

நன்கு ஊறியதும் அதை இளநீரில் கலந்து குடித்து வந்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.

இளநீர் மற்றும் சப்ஜா விதை இரண்டுமே உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது.

சாலியா விதையில் அதிகப்படியான வைட்டமின்கள், புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை நிறைந்திருக்கின்றன. இவை இரண்டும் சேரும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகமாகி ரத்தசோகை சரியாகும்.

​ஹீமோகுளோபினை அதிகரித்து ரத்தசோகை தீர்க்கும் பீட்ரூட் பச்சடி

​ஹீமோகுளோபினை அதிகரித்து ரத்தசோகை தீர்க்கும் பீட்ரூட் பச்சடி

தேவையான பொருள்கள்பீட்ரூட் – 1,தயிர் – ஒரு கப்,புதினா இலைகள் – 15கல் உப்பு – 2 சிட்டிகை,மிளகு பொடி – 2 சிட்டிகை அளவு,சப்ஜா விதை (ஊறவைத்தது) – 1 ஸ்பூன்,

செய்முறை

பீட்ரூட்டை தோல் சீவி அதை துருவி எடுத்துக் கொள்ளுங்கள்.ஒரு பௌலில் தயிரைச் சேர்த்து அதில் உப்பையும் சேர்த்து, கட்டியில்லாமல் நன்கு கலக்கி எடுத்துக் கொள்ளுஙகள்.இதில் துருவிய பீட்ரூட் மற்றும் பொடியாக நறுக்கிய புதினாவைச் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.இதில் மிளகுத் தூளைச் சேர்த்த பின் ஊறவைத்த சப்ஜா விதைகளைச் சேர்த்து கலந்தால் சுவையான, ஆரோக்கியமான பீட்ரூட் பச்சடி ரெடி!இதை தினமும் அல்லது வாரத்துக்கு மூன்று நாள் உணவோடு சேர்த்து எடுத்துக் கொண்டு வரும்போது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article