ஒடிசா ரயில் விபத்தில் 200ற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 900 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர விபத்தின் காரணமாக ஒடிசா வழியாக செல்ல இருந்த 44 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ள்ளது. விபத்து நேரிட்ட பகுதி வழியே செல்லும் 38 ரயில்களும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.