9.1 C
Munich
Thursday, September 12, 2024

இந்தியாவில் அதிகரிக்கும் காற்று மாசு! கங்கை சமவெளியும் விலக்கல்ல.

Must read

Last Updated on: 7th June 2023, 11:57 am

அண்மையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் ஒன்றில், உலகின் 14 மாசுபட்ட நகரங்கள் இந்தியாவில் உள்ளன. WHO வெளியிட்டுள்ள தரவுகளின்படி, உலகின் மிகவும் மாசுபட்ட 20 நகரங்களில் சேர்க்கப்பட்டுள்ள மிகவும் மாசுபட்ட 14 நகரங்களில் டெல்லி மற்றும் வாரணாசி ஆகியவை அடங்கும். சல்பேட், நைட்ரேட், கறுப்பு கார்பன் மற்றும் நிலக்கரியில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற மாசுபடுத்திகள் இந்தியாவில் மாசுபாட்டின் முக்கியமான காரணங்களாக இருக்கின்றான.

மாசுபட்ட காற்றின் விளைவாக ஆண்டுதோறும் சுமார் 70 லட்சம் மக்கள் இறக்கின்றனர் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கடுமையான நோய்களைத் தவிர்க்க, குறிப்பாக குழந்தைகள் அல்லது வயதானவர்கள் வீட்டில் இருந்தால், நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பதை அண்மைத் தகவல்கள் உணர்த்துகின்றன.  

உலகில் 10 பேரில் 9 பேர் அசுத்தமான காற்றை சுவாசிப்பதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கை கூறுகிறது. வீடு மற்றும் வெளிப்புறம் என ஒட்டுமொத்த காற்று மாசுபாட்டின் விளைவாக தொற்று அல்லாத நோய்களும் (NCDs) ஏற்படுகின்றன என்பதை இந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

பக்கவாதம், இதய நோய்கள், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற தொற்றாத நோய்கள் ஒவ்வொரு ஆண்டும் பல இறப்புகளுக்கு வழிவகுக்கிறது. காற்று மாசு அளவு PM10 என்ற உச்சத்தை எட்டும்போது, ​​காற்றின் தரம் மிகவும் குறைந்துவிடுகிறது.

இந்தியாவில் காற்றின் தர நிலை  துரதிர்ஷ்டவசமாக, வட இந்தியாவில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது. டெல்லி, கான்பூர் மற்றும் ஆக்ரா போன்ற இடங்களில் மாசுபாடு அதிகமாக உள்ளது.

இந்தப் பட்டியலில், வாரணாசி, கயா, ஸ்ரீநகர் மற்றும் முசாபர்பூர் போன்ற நகரங்களும் சேர்ந்துள்ளது கவலைகளை அதிகரிக்கிறது.இதற்கு முக்கியக் காரணம், PM 2.5 அளவுகள் மிக அதிகமாக இருந்தது என்றாலும்,  இந்த நகரங்களில் தொழிற்சாலைகள் அல்லது மாசுபாட்டின் பிற ஆதாரங்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.கங்கை சமவெளி மற்றும் பள்ளத்தாக்கில் காற்று மாசுஉண்மையில், கங்கை சமவெளிகளும், பள்ளத்தாக்குகளும், காற்று மாசுபாட்டின் முக்கிய இடமாக வேகமாக வளர்ந்து வருகின்றன.

இதற்குகாரணம், பள்ளத்தாக்கில் உள்ள காற்று மாசுக்கள் வெகுதூரம் சிதறாமல் மாசு அளவு அதிகரிக்க வழிவகுக்கிறது.மாசு அதிகரிப்பும் ஆரோக்கியத்தின் மீதான தாக்கமும்நாம் பொதுவெளியில் இருக்கும்போது மட்டுமா காற்று மாசு (Air Pollution) அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது? வீட்டிற்குள் இருக்கும்போதும் காற்றின் தரம் நமது ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பெரியவர்களின் நோயெதிர்ப்பு அமைப்பு அவர்களை மாசுபாட்டிலிருந்து ஓரளவு பாதுகாக்க முடியும் என்றாலும், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்.

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article