Last Updated on: 21st August 2024, 05:53 pm
ஸ்டார்பக்ஸ் உலகின் பிரபல காபி நிறுவனமான செயல்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் ஏற்கனவே இருந்து சிஇஓ-வை வேலையில் இருந்து நீக்கியது. தற்போது 50 வயதான பிரையன் நிக்கோலை புதிய சிஇஓ-வாக நியமித்துள்ளது.
நிக்கோல் தினமும் 1,600 கி.மீட்டர் தூரம் பயணம் செய்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. ரெயிலில் அல்லது விமானத்தில் பயணம் செய்ய தேவையில்லை. இவருக்கென கார்ப்பரேட் ஜெட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த மாதத்தில் இருந்து புதிய சிஇஓ-வாக பதவி ஏற்க உள்ளார். இவர் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். நிறுவனத்தின் தலைநகர் சியாட்டில் உள்ளது. கலிபோர்னியாவின் அவரது வீட்டில் இருந்து ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் 1600 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இவர் வேலை செய்வதற்காக வாரத்தில் மூன்று நாட்கள் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரையன் நிக்கோலின் அடிப்படை சம்பளம் 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். 3.6 மில்லியன் முதல் 7.2 மில்லியன் வரை அவரது செயல்பாட்டை பொறுத்து போனஸ் பெற முடியும். 23 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வருடாந்திர பங்கு பெறக்கூடிய தகுதியை பெறுவார்.பிரையன் நிக்கோல் வேலைக்காக நீண்ட தூரம் பயணிப்பது இது முதல் முறையல்லை. இதற்கு முன்னதாக சிபோட்டில் சிஇஓ-வாக இருக்கும்போதும் இதேபோன்று பயணம் மேற்கொண்டுள்ளார்.சிபொட்டில் தலைமை அலுவலகம் கொலராடோவில் இருந்தது, நிக்கோல் 15 நிமிடத்தில் கார் மூலம் சென்றடைய முடியும். ஆனால், மெக்சிகன் பாஸ் புட் நிறுவனம் தலைமை அலுவலகத்தை கலிபோர்னியாவுக்கு அவரை நியமனம் செய்த மூன்று மாதத்திலேயே மாற்றியது.