Last Updated on: 6th June 2023, 12:15 pm
Apple நிறுவனத்தின் WWDC 2023 நிகழ்ச்சியில் புதிய ios 17 வெளியாகியுள்ளது. இந்த புதிய OS புத்தம் புதிய பல வசதிகளை கொண்டுள்ளது. புதிதாக Journal, Live Voicemail, புதிய Stickers போன்ற பல புதிய வசதிகள் அறிமுகம் செய்யயப்பட்டுள்ளன. இந்த புதிய வசதிகள் நிறைந்த iOS 17 படிப்படியாக ஐபோன்களுக்கு வெளியாகும். இது பற்றி மேலும் விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
உலகளவில் ஆப்பிள் நிறுவனம் நடத்திய WWDC 2023 நிகழ்ச்சியில் புதிய ios 17 வெளியாகியுள்ளது. இந்த புதிய அப்டேட் வரும் செப்டம்பர் மாதம் மத்தியில் ஐபோன்களுக்கு கிடைக்கும். இதைத்தொடர்ந்து புதிய ஆப்பிள் ஐபோன் 15 ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது. இந்த புதிய ios 17 இதுவரை விற்பனையான ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் முதல் ஆப்பிள் ஐபோன் 11 வரை கிடைக்கும். மேலும் ஐபோன் XS, XR, SE (2வது ஜெனரேஷன்) ஆகிய ஐபோன்களுக்கு கிடைக்கும்.
iOS 17 புதிய வசதிகள்:
புகைப்படங்களை எல்லாம் தனியாக எடுத்து ஒரு பத்திரிகை போல மாற்றலாம். நாம் எடுத்த போட்டோ எங்கு எடுக்கப்பட்டது, அதன் காரணம் என்ன, இடம் போன்ற அனைத்தையும் எழுதலாம்.
ஒவ்வொரு தனிநபருக்கு தனித்தனியாக காண்டாக்ட் போஸ்டர் வைத்துக்கொள்ளலாம். இதை ஒரு போட்டோ அல்லது அனிமேஷன், இமேஜ் என எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.
ஆப்பிள் வாட்ச் கருவியில் இடம்பெறும் அதே வசதி இனி ஐபோன்களிலும் இடம்பெறும். நமது போனை ஸ்டாண்ட் மீது இரவு நேரங்களில் வைத்துவிட்டால் அது ஒரு கடிகாரம் போல வேலை செய்யும். மேலும் கூடுதலாக Live Activities, Game Scores, Widgets, Clock Styles போன்ற பல வசதிகள் உள்ளன.
Live Voice Mail:
நாம் யாருக்காவது தொடர்புகொள்ள முயற்சி செய்தால் கூடுதலாக Live Transcript மூலமாக Voicemail அனுப்பலாம். உங்கள் அழைப்பாளர் எதை பற்றி பேச விரும்புகிறார் என்பதை முன்கூட்டியே தெரிவதால் நீங்கள் அழைப்பை எடுக்கலாமா? வேண்டாமா? என்பதை முன்பே முடிவு செய்யலாம்.
Facetime:
ஒருவருக்கு Facetime Video மூலமாக இனி வீடியோ மெசேஜ் அனுப்பலாம். இந்த வசதி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
Message:
முந்தய மெசேஜ் ஆப் விட இப்போது வெளியாகவுள்ள Message ஆப் மிகவும் வேகமாக இயங்கும். இனிமேல் நேரடியாக Message Bubble கிளிக் செய்து நம்மால் மெசேஜ் செய்யமுடியும். நமது குடும்ப உறுப்பினர்களுடன் நம்மால் இணைத்துக்கொண்டு அவர்கள் எங்கு உள்ளார்கள் என்பதையும், அவர்களின் ஸ்மார்ட்போன் பேட்டரி அளவு, நிலை போன்ற பலவற்றை தெரிந்துகொள்ளலாம்.
Airdrop:
இனி ஆப்பிள் Airdrop பயன்படுத்துவது மேலும் சுலபமாக்கப்பட்டுள்ளது. இரண்டு போன்களை நாம் அருகில் வைப்பதன் மூலம் இனி ஒரு போனில் இருந்து இன்னொரு போனிற்கு விவரங்களை பரிமாற்றமுடியும். இதில் இமெயில், போன் நம்பர் வைத்துக்கொண்டு ஷேர் செய்யலாம்.நமது ஸ்மார்ட்போன்களில் இருந்து ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு சுலபமாக இனி AirDrop செய்யலாம். SharePlay மூலம் நாம் பார்க்கும் ஒரு விஷயத்தை வேறு ஒரு போனிற்கு மாற்றலாம்.