4000 ரூபாய்க்கு வாங்கிய நாற்காலியை 82 லட்சத்துக்கு விற்ற நபர்!!

அமெரிக்காவில் ஒருவர் 4000 ரூபாய்க்கு வாங்கிய நாற்காலியை 82 லட்சத்துக்கு விற்று நம்பமுடியாத லாபத்தைப் பெற்றுள்ளார்.

4000 ரூபாய்க்கு வாங்கிய நாற்காலி

உலகில் பொருட்களை வாங்குவதும் விற்பதும் சகஜம். அத்தகைய வியாபாரத்தில் லாபமும் நஷ்டமும் உண்டு. ஆனால் ஒரு பொருளை பல ஆயிரம் மடங்கு லாபத்திற்கு விற்றால் அது மிக பாரிய விடயம் தானே. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஃபேஸ்புக் மார்க்கெட்ப்ளேஸ் (Facebook marketplace) என்பது ஒரு ஆன்லைன் தளமாகும், அங்கு மக்கள் பல்வேறு பொருட்களை வாங்கவும் விற்கவும் செய்கிறார்கள். சிலர் அதில் பெரும் லாபம் அடைகிறார்கள்.

ஆனால், சந்தையில் இருந்து வெறும் 50 டொலருக்கு (இந்திய பணமதிப்பில் 4000 ரூபாய்) வாங்கிய நாற்காலி 1 லட்சம் டொலருக்கு (இந்திய பணமதிப்பில் 82 லட்சம் ரூபாய்) விற்கப்பட்டது.

கனவிலும் நினைக்கவில்லைஜஸ்டின் மில்லர் எனும் TikToker தான் இத்தனை பெரும் லாபத்திற்கு வர்த்தகம் செய்த நபர். லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் ஜஸ்டின் கூறுகையில், இந்த நாற்காலியைப் பார்த்த நொடியே அதில் ஏதோ ஒரு சிறப்பு இருப்பதாகத் தெரிந்தது. ஆனால் அதை இவ்வளவு ரூபாய்க்கு விற்க முடியும் என்று மில்லர் கனவிலும் நினைக்கவில்லை.

கூகுளில் தேடியபோது, ​​இது போன்ற சற்றே பழைய நாற்காலியின் விலை ஒரு கோடி ரூபாய்க்கு மேல் என்று பார்த்தேன். இந்த நாற்காலி தனக்கு இன்னும் சில ஆயிரங்களையாவது லாபமாகத் தருவது உறுதி என நம்பியதாக அவர் கூறினார்.

82 லட்சத்துக்கு விற்பனைநாற்காலி சிறப்பு என்பதை உணர்ந்த மில்லர், அதை சீரமைக்க ரூ.2.5 லட்சம் செலவும் செய்தார். பின்னர், ஏல நிறுவனமான சோத்பிக்கு கொண்டு வரப்பட்டு ஏலத்தில் விடப்பட்டது.

நாற்காலிக்கு 25 முதல் 40 லட்சம் வரை ஏல நிறுவனம் எதிர்பார்ததது. ஆனால், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அந்த நாற்காலி 82 லட்சத்துக்கு விற்பனையானது. 

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times