Last Updated on: 21st August 2023, 10:32 am
அமெரிக்க மாகாணமான ஹவாயில் காட்டுத்தீயால் மொத்தமாக உருக்குலைந்து போன லஹைனா நகரில் ஒரே ஒரு குடியிருப்பு மட்டும் தப்பிய அதிசயம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நகரம் மொத்தமாக சாம்பலானது
ஹவாய் மாகாணத்தில் மௌயி தீவில் ஏற்பட்ட மிக மோசமான காட்டுத்தீயில் லஹைனா நகரம் மொத்தமாக சாம்பலானது. ஆனால் கடலை ஒட்டிய குடியிருப்பு ஒன்று மட்டும் அதிசயமாக தப்பியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து வியக்க வைத்துள்ளது.
அந்த குடியிருப்பின் உரிமையாளர்களான டோரா அட்வாட்டர் மில்லிகின் மற்றும் அவரது கணவர் டட்லி லாங் மில்லிகின் தெரிவிக்கையில், 4 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான அந்த குடியிருப்பில் சமீபத்தில் தான் ஒப்பீட்டளவில் சிறிய மாற்றங்களைச் செய்ததாக தெரிவித்துள்ளனர்.அதுவே கொடூரமான காட்டுத்தீயில் இருந்து அந்த வீட்டை காப்பாற்றியிருக்கலாம் என அவர்கள் நம்புகின்றனர். அந்த குடியிருப்பை சுற்றி மொத்தமாக எரிந்து சாம்பலாகிப் போன நிலையில், அந்த குடியிருப்பு மட்டும் வெள்ளை நிறத்தில் பளிச்சென காட்சியளிக்கிறது.
மெளயி காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 114 பேர்கள் மரணமடைந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. பலரது உடல்கள் அடையாளம் காண முடியாமல் கருகியுள்ளதால், டி.என்.ஏ சோதனைக்காக காத்திருக்கின்றனர்.
அதிசயமாக தப்பிய ஒற்றை குடியிருப்பு
ஆனால் சமீபத்தில் தான் எளிதாக தீப்பற்றிக்கொள்ளும் நிலக்கீல் கூரையை மற்றிவிட்டு கனரக உலோகத்தாலான கூரை ஒன்றை நிறுவியுள்ளனர். அத்துடன் கரையான்கள் வீட்டிற்கு பரவும் அபாயத்தைக் குறைக்க, வீட்டைச் சுற்றி ஈரப்பதமாக இருப்பதையும் கட்டுப்படுத்தியுள்ளனர்.
ஆனால் இந்த மாற்றங்கள் தான் இறுதியில் அவர்கள் குடியிருப்பை அழிவிலிருந்து காப்பாற்றியுள்ளது. லஹைனா நகரம் மொத்தமாக தீக்கிரையான போது இந்த தம்பதி மாசசூசெட்ஸில் உள்ள குடும்பத்தைப் பார்க்கச் சென்றுள்ளனர்.
டோரா மற்றும் அவரது கணவரும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மௌயில் வசித்து வருகின்றனர், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்த வீட்டை வாங்கியுள்ளனர்.
லஹைனா நகரம் தீக்கிரையான அடுத்த நாள், மாவட்ட நிர்வாகத்தினர் டோரா தம்பதிக்கு தகவல் அளித்து, அவர்களது குடியிருப்பு மட்டும் பேரழிவில் இருந்து தப்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தகவல் காட்டுத்தீயாக பரவ, தற்போது அதிசய குடியிருப்பு என மக்களால் குறிப்பிடப்படுகிரது. மெளயி காட்டுத்தீக்கு இதுவரை 1000 பேர்கள் வரையில் மாயமாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், இறப்பு எண்ணிக்கை 500 தொடலாம் என அஞ்சப்படுகிறது.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.