Last Updated on: 24th July 2023, 11:04 am
கொலம்பியாவில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலியாகினர்.
அமெரிக்காவுக்கு பயணித்த பேருந்து
கொலம்பியா நாட்டில் இருந்து 50 பயணிகளுடன் பேருந்து ஒன்று அமெரிக்காவுக்கு சென்று கொண்டிருந்தது.குறித்த பேருந்து பிளேயன் நகரின் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்து விபத்து
திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து நிலைதடுமாறியது. இதனையடுத்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது.இதில் பேருந்தில் பயணித்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.